இந்த வாய் என்னவெல்லாம் பேசுச்சு? கடைசில.... தெய்வ பக்தியில் மூழ்கிய ஜோதிகா!

 
jyothika


சூர்யாவின் கருப்பு: 

நடிகர் சூர்யாவுக்கு தொடர்ச்சியாக சில படங்கள் தோல்வியடைந்ததால் எப்படியாவது ஒரு மாபெரும் வெற்றிக்கொடுத்து மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க வேண்டும் என அதீத முயற்சியோடு திரைப்படங்களை தேர்வு செய்து வந்தார். 

அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கருப்பன் திரைப்படத்தில் நடித்த சூர்யா மாபெரும் வெற்றி கொடுத்தார் . இந்த திரைப்படம் அமோக வசூலிட்டி பட குழுவினருக்கு பெரும் லாபத்தை பெற்று தந்திருக்கிறது.  இதற்காக கருப்பன் கோவிலுக்கு 18 அடி கொண்ட பிரம்மாண்ட அரிவாள் ஒன்றை நேர்த்திக்கடனாக செலுத்தியிருந்தார்கள்.

jyothika surya

 

ஜோதிகா ஸ்வாமி தரிசனம்: 

இப்படியான சமயத்தில் சூர்யா ஒரு பக்கம் சுவாமி கோவில் தரிசனம் என சென்று கொண்டிருக்கும் சமயத்தில் நடிகை ஜோதிகாவும் ஒரு பக்கம் தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார். ஆம் தற்போது ஜோதிகா நடிப்பில் சிஸ்டம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

இப்படியான காமாக்யா தேவியை சென்று ;வழிபட்டுள்ள நடிகை ஜோதிகா அது குறித்து தனது இன்ஸ்டாகிராமில்  " அது அவள்தான் என்று எனக்குத் தெரியும். காமாக்யா தேவியின் துணையுடன் “System” பயணத்தைத் தொடங்கினேன். இப்படம் ஓரளவுக்கு வெற்றியைப் பெற வேண்டும் என வேண்டி, இன்று மகாலட்சுமியின் அருளுடன் இப்பயணத்தை நிறைவு செய்துள்ளேன். தேவி மா சக்தி எப்போதும் நமக்கு வல்லமையூட்டி அருள்புரியட்டும் என கூறி பதிவிட்டுள்ளார்.

இந்த வாய் என்னவெல்லாம் பேசுச்சு? 

jyothika

முன்னதாக கொரோனா காலகட்டத்தில் நடிகை ஜோதிகா ஒரு முறை விருது வாங்க வரும் போது கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்தும் பணத்தை தயவுசெய்து நிறுத்திவிட்டு ஹாஸ்பிடல்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் அந்த பணத்தை செலவிடுங்கள் என்று கூறியிருந்தார். 

இது தெய்வ நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியும் வெறுப்பையும் ஏற்படுத்தியது. இதனால் ஜோதிகா சர்ச்சைக்குரிய நபராக பேசப்பட்டு வந்தார். ஆனால், தற்போது அவரே கணவரின் கருப்பு பட வெற்றி மற்றும் தன்னுடைய சிஸ்டம் பட வெற்றிக்கு செலுத்தும் விதமாக போட்டுள்ள இந்த பதிவு பேசுபொருளாகியுள்ளது. 
 

Tags

From Around the web