லிங்கா ஹீரோயின் உடன் ஜோதிகா!.. ‘சிஸ்டம்’ படம் என்ன மாதிரியான கதை!.. டிரைலர் மிரட்டுதே!..
தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, ஒடிடி தளங்களில் வலுவான பெண்மணி கதைகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான சிஸ்டம் படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ள இந்த நீதிமன்ற த்ரில்லர் திரைப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
படத்தில் சோனாக்ஷி சின்ஹா அரசு வழக்கறிஞர் நேகா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது திறமையை நிரூபிக்க அவர் நீதிமன்ற ஸ்டெனோகிராஃபரான சரிகாவை அணியில் இணைக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். மேலும் அஸ்தோஷ் கோவாரிகர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
டிரெய்லர் முழுவதும் நீதிமன்ற மோதல்கள், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் மற்றும் சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை சுட்டிக்காட்டும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. “பணக்காரர்களின் சத்தத்தில் ஏழைகளின் குரல் காணாமல் போகிறது” என்ற வசனம் படத்தின் கருவை வெளிப்படுத்துகிறது. மேலும், டிரெய்லர் வெளியானதிலிருந்து ஜோதிகாவின் நடிப்பு சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த படம் சாதாரண நீதிமன்ற நாடகமாக இல்லாமல், சமூக அமைப்புகளில் நீதி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கேள்விக்குள்ளாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகைகள் தெரிவித்துள்ளனர். சிஸ்டம் திரைப்படம் வரும் மே 22ஆம் தேதி இந்தியா உட்பட உலகம் முழுவதும் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யாவின் கருப்பு நாளை வெளியாகவுள்ள நிலையில், அடுத்த வாரம் வெளியாகவுள்ள தனது நேரடி ஓடிடி படத்துக்கு புரமோஷனை ஆரம்பித்துள்ளார் ஜோதிகா.
