அம்மாவை போலவே அசத்தலா இருக்கிறாரே ஜோதிகா மகள்!.. சிஸ்டம் ஸ்பெஷல் ஷோவில் சூர்யா குடும்பம்!..

 
jyothika

பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் நடிகை ஜோதிகா இணைந்து நடித்துள்ள சிஸ்டம் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அப்படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு தன் குடும்பத்துடன் சென்றுள்ள ஜோதிகாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சட்டரீதியான பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கியுள்ளார். படத்தில், முன்னணி வழக்கறிஞராக நடிகர் அஷுதோஷ் ராணா நடித்துள்ளார். அவரது மகளான நேஹா கதாபாத்திரத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார். தந்தையைப் போலவே சிறந்த வழக்கறிஞராக தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற கனவுடன் அரசு வழக்கறிஞராக பணியாற்றும் இளம் பெண்ணாக அவர் தோன்றுகிறார்.

ஆனால், நீதிமன்றத்தில் அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த சட்ட அமைப்பிற்குள் தனது திறமையை நிரூபிப்பது நேஹாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறுகிறது. இதன் நடுவில், குடும்ப சூழ்நிலைக்காக கடுமையாக உழைக்கும் ஒரு ஸ்டெனோகிராஃபர் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். 

நேஹா மற்றும் ஜோதிகா கதாபாத்திரம் இணைந்து, தவறான சட்ட அமைப்புக்கு எதிராக எவ்வாறு போராடுகிறார்கள், நீதிக்காக அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன, அதே நேரத்தில் தந்தை – மகள் இடையே உருவாகும் கருத்து மோதல்கள் எப்படி உச்சக்கட்டத்தை அடைகிறது என்பதே “System” திரைப்படத்தின் முக்கியக் கதையாக அமைந்துள்ளது.

சமூக பிரச்சனைகளுடன் உணர்ச்சி மற்றும் திரில்லர் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள சிஸ்டம், தற்போது OTT ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும், அப்படத்தின் ப்ரீமியர் ஷோவிற்கு வந்த ஜோதிகாவின் மகளை பார்த்த ரசிகர்கள் அம்மாவை போலவே மகள் அப்படியே அச்சு அசல் இருக்காரே என கமண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ஜோதிகாவின் மகள் தியாவும் சினிமாவில் இயக்குநராகும் படிப்பை படித்து முடித்துள்ளார். கூடிய சீக்கிரமே அவரும் இயக்குநராக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் மகன் தேவும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். 

ஏற்கனவே கருப்பு வெற்றியால் குடும்பமே சந்தோஷத்தில் இருப்பதால் சிஸ்டர் அவர்களுக்கு கூடுதல் போனஸ் ஆக மாறியுள்ளது.


 


 

Tags

From Around the web