Connect with us
jyotika

latest news

ஜோதிகா சொன்ன டபுள் மீனிங் வசனம் உள்ள படம் விஜய் நடிச்ச கோட்?!.. அதுவும் இந்த காட்சியா?!

Kanguva: சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படமான கங்குவா எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. படம் ரசிகர்களை கவரும் படி இல்லை என்றாலும் சூர்யாவின் மீது இவ்வளவு வன்மத்தை கொட்ட வேண்டிய அவசியமே இல்லை என்றே தோன்றியது. விஜய் ரசிகர்களும், ஒரு அரசியல்கட்சியை சேர்ந்தவர்களும் இதை கிடைத்த வாய்ப்பாக நினைத்து வன்மத்தை கக்கினார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக கங்குவா படம் உருவாகியிருந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவு, கலை இயக்கம், சூர்யாவின் நடிப்பு எல்லாவற்றையும் பாராட்டியே ஆக வேண்டும். ஆனால், படத்தில் இடம் பெற்றிருந்த காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை. படத்தின் கதைக்கும் காட்சிகளுக்கும் தொடர்பு இல்லாமல் போனது ஒரு பெரிய குறை.

இதையும் படிங்க: கையில் வீச்சருவாவுடன் ரத்தம் தெறிக்க மிரட்டலான லுக்கில் நயன்தாரா!… டீசர் வீடியோ இதோ!..

மேக்கிங் என பார்த்தால் கங்குவா ஒரு சிறந்த படம்தான். ஆனால், ரசிகர்களை அமர வைக்கும் கதை என படத்தில் ஒன்றுமில்லை. இதுதான் இப்படத்திற்கு எதிராக போனது. இதைவைத்தே விமர்சகர்கள் இப்படத்தை கழுவி ஊற்றினார்கள். புளூசட்ட மாறன் இப்படத்தை கிண்டலடித்து தொடர்ந்து கருத்து கூறி வருகிறார்.

jyotika

#image_title

அதோடு, படம் முழுக்க கத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்கிற விமர்சனமும் எழுந்தது. இந்நிலையில், சூர்யாவின் மனைவி ஜோதிகா வெளியிட்ட அறிக்கையில் ‘கங்குவா ஒரு சிறந்த படம். படத்தின் முதல் அரை மணி நேரம் மட்டுமே குறை. அதோடு, ஒலி அமைப்பு சில காட்சிகளில் அதிகமாக இருந்தது. முதல் காட்சி வெளியாகும் முன்பே எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது ஆச்சர்யமாக இருந்தது.

இதையும் படிங்க: பிக்பாஸ் பாலாஜியை சட்டையை பிடித்து அடித்த பெண் ஆட்டோ டிரைவர்… இந்த கேரக்டருக்கு தேவைதான்!..

சூர்யா தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இதை நான் அவரின் மனைவியாக சொல்லவில்லை. ஒரு சினிமா ரசிகையாக சொல்கிறேன். சமீபத்தில் வந்த ஒரு படத்தில் இரட்டை அர்த்த வசன காட்சிகள் இருந்தது. அதற்கு கோபப்படாதவர்கள் கங்குவா படத்தை திட்டுகிறார்கள்’ என சொல்லி இருந்தார்.

இந்நிலையில், கோட் படத்தில் விஜயும், சினேகாவும் போனில் பேசிக்கொள்வது போல ஒரு காட்சியை பகிர்ந்து இதுதான் ஜோதிகா சொன்ன காட்சி என சிலர் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ‘என்ன சத்தம்?’ என சினேகா கேட்க விஜய் ‘வாய்’ என சொல்வார். சினேகா அதை தவறாக புரிந்துகொள்வது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top