Connect with us
jyotika

Cinema News

சென்னை வந்தாலும் சூர்யா வீட்டில் தங்காத ஜோதிகா!.. அப்படி என்ன பஞ்சாயத்து?!…

வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகை ஜோதிகா. மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகைகளில் இவரும் ஒருவர். வசந்த் இயக்கத்தில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சூர்யா.

அப்போதே இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிவிட்டது போல. அதன்பின் ஜோதிகா ஒருபக்கமும், சூர்யா ஒருபக்கமும் வளர துவங்கினர். சூர்யாவுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் ஜோதிகா. எனவே, இருவருக்கும் இடையே காதல் தீ பத்திக்கொண்டது.

இதையும் படிங்க: வேறு வழியில்லாமல் நிக்கோலை கரம்பிடிக்கும் வரலட்சுமி! பின்னணி காரணம் என்ன தெரியுமா?

இதற்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்தாலும் சூர்யா பிடிவாதமாக இருந்ததால் திருமணத்திற்கு சம்மதித்தார். 2006ம் வருடம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 18 வருடங்களாக இருவரின் திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருக்கிற்து. இருவருக்கும் ஒரு மகன், மகள் இருக்கிறார்கள்.

பல வருடங்கள் சென்னையில் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்த சூர்யா கடந்த சில வருடங்களாக மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். இதற்கு பின்னனியில் ஜோதிகா இருப்பதாகவே சொல்லப்படுகிறது. சூர்யாவை பாலிவுட் ஹீரோவாக மாற்ற வேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆனால், அவர் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

suriya

இன்னும் சொல்லப்போனால் தமிழிலேயே சூர்யா பெரிய இடைவெளி விட்டிருக்கிறார். அவரின் கடைசிப்படம் எதற்கும் துணிந்தவன் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. அதன்பின் கங்குவா என்கிற படத்தில் நடித்தார். இப்படத்தின் வேலைகள் ஒன்றரை வருடங்களாக நடந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில், மும்பையிலிருந்து சென்னை வந்தாலும் ஜோதிகா தி.நகரில் கடல்போல சூர்யா கட்டியிருக்கும் பிரம்மாண்ட பங்களாவில் தங்குவதில்லை. ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில்தான் தங்குகிறாராம். இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top