×

இமயமலையில் ஜோதிகா - இணையத்தில் வைரலாகும் ட்ரெக்கிங் வீடியோ!

நடிகை ஜோதிகாவின் ட்ரெக்கிங் வீடியோ வைரல்!
 
இமயமலையில் ஜோதிகா - இணையத்தில் வைரலாகும் ட்ரெக்கிங் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை ஜோதிகா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து வருகிறார். கணவர் சூர்யா அவரது இரண்டாவது இன்னிங்சிற்கு சப்போர்ட்டாக இருந்து வருகிறார். 

பல வருடங்களாக நடிகை ஜோதிகா எந்த ஒரு சமூகவலைத்தள பக்கங்களையும் பயன்படுத்தாதிருந்தார். இந்நிலையில் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரை சூர்யா அன்புடன் வரவேற்றார். 

இமயமலையில் ஜோதிகா - இணையத்தில் வைரலாகும் ட்ரெக்கிங் வீடியோ!

இந்நிலையில் நடிகை ஜோதிகா சுதந்திர தினத்தன்று இமயமலைக்கு ட்ரெக்கிங் சென்ற வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் இமயமலையில் 70 கிலோமீட்டர் தூரம் வரை நடந்தே சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News