விஜய்தான் கடைசி நடிகர்!.. அவரோடு எல்லாமே ஓவர்!.. அப்பவே கணித்த கே.பாலச்சந்தர்..
கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார்:
Vijay: கோலிவுட்டை பொறுத்தவரை பல வருடங்களாகவே சூப்பர்ஸ்டார் இருக்கையில் அமர்ந்திருப்பவர் நடிகர் ரஜினி. அதேநேரம் ‘சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது நிரந்தரமானது இல்லை. எந்த நடிகர் தொடர்ந்து அதிக வசூலை கொடுக்கும் படங்களை கொடுக்கிறாரோ அவர்தான் சூப்பர் ஸ்டார்’ என பல வருடங்களுக்கு முன்பு ரஜினியே ஒரு விழாவில் பேசியிருக்கிறார். அது உண்மையும் கூட.
அதேநேரம் தனது சூப்பர்ஸ்டார் பதவியை யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதிலும் ரஜினி எப்போதும் கவனமாக இருக்கிறார். அதனால்தான் 74 வயதிலும் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுக்க முயற்சி செய்து வருகிறார். ரஜினிக்கு பின் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய். இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் முதல் 50 கோடி வசூலை தொட்டது இவரின் கில்லி திரைப்படம்தான்.
ரஜினியை ஓவர்டேக் செய்த விஜய்:
ரஜினி 50 வருடங்களாக சினிமாவில் இருப்பவர். அவரின் சாதனையை விஜய் கண்டிப்பாக முறியடிக்க முடியாது. அதே நேரம் விஜயின் பல திரைப்படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலையும் செய்திருக்கிறது. கடந்த 10 வருடங்களாகவே ரஜினியின் சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் விஜயின் படங்கள் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது.
ஒருபக்கம் ரஜினியும் ஜெயிலர் போன்ற ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். லோகேஷ் இயக்கத்தில் அவர் நடித்த கூலி படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தை நம்பி இருக்கிறார் ரஜினி.
ஆனால் விஜயோ ஜனநாயகன் படத்தோடு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார்,
யார் சூப்பர்ஸ்டார்?:
விஜய் வாரிசு படத்தில் நடித்த போது அந்த படவிழாவில் பேசிய சரத்குமார் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜ் ஆகியோர் விஜய்தான் இனிமேல் சூப்பர் ஸ்டார் என பேசினார்கள். அப்போது விஜய் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இது ரஜினி ரசிகர்களை கோபப்படுத்த ‘யார் சூப்பர்ஸ்டார்?’ என்கிற விவாதம் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் எதிரொலித்தது. ஒரு பக்கம் ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை விஜய் ரசிகர்களை கோபப்படுத்த இப்போது வரை அவர்கள் ரஜினியை வன்மத்துடன் விமர்சித்து வருகிறார்கள்.
ஒருபக்கம் பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் நடிகர் விஜயை பற்றி ஒரு முக்கிய கருத்தை கூறியிருக்கிறார். ‘தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த நூற்றாண்டில் கடைசி சூப்பர் ஸ்டார் நடிகராக தம்பி தளபதி விஜய்தான் இருப்பார். அவருக்கு பிறகு உச்ச நடிகர்களும் இருக்க மாட்டார்கள். சூப்பர் ஸ்டார் பட்டமும் இருக்காது’ என சொல்லி இருக்கிறார் பாலச்சந்தர்.
