Categories: Cinema News latest news throwback stories

யானைக்கும் அடி சறுக்கும்!.. ஒரே ஒரு சீரியலால் பாலசந்தரை மண்ணைக் கவ்வ வைத்த இயக்குனர்!..

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து சினிமாவில் பணியாற்றியவர். தமிழ் சினிமாவிற்கு ஏகப்பட்ட நடிகர்களை உருவாக்கி கொடுத்தவர். இரு பெரும் ஜாம்பவான்களான நடிகர் கமல் மற்றும் நடிகர் ரஜினியை அறிமுகப்படுத்திய பெருமை கே.பாலசந்தரை சேரும்.

balachander

1965 ஆம் ஆண்டு நாகேஷ் கதாநாயகனாக நடிக்க நீர்குமிழி என்ற படத்தை இயக்கினார். அது தான் இவர் இயக்கிய முதல் திரைப்படமாகும். இவரின் படங்களில் குடும்பத்திலுள்ள மனித உறவுகளுக்கு இடையேயான பிரச்சினை, சமூக பிரச்சினை இவைகள் தான் முக்கிய அம்சமாகும்.

பொக்கிஷங்கள்

நாடக துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் தான் கே.பாலசந்தர். தமிழில் இன்றுவரை மக்கள் மனதில் நீங்காத திரைப்படமாக விளங்கும் அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி போன்ற திரைப்படங்கள் இவரின் இயக்கத்தில் வெளிவந்த முத்துக்கள் என்றே கூறலாம்.

balachander

ஓரளவு திரைத்துறையில் சாதித்து விட்டு தனக்கு சொந்தமான தயாரிப்பு கம்பெனி மூலம் நாடகம் இயக்குவதை விரும்பினார். அதன் பேரில் 90களில் சக்க போடு போட்ட ‘கையளவு மனசு’ சீரியலை இயக்கினார் கே.பாலசந்தர். இந்த சீரியலில் நடிகை ரேணுகா, பிரகாஷ் ராஜ் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெற்றது.

சீரியலில் போட்டி

அதே வேளையில் சன் டிவியில் பல வெற்றி சீரியல்களை இயக்கிக் கொண்டிருந்த மங்கை ஹரிராஜன் என்பவர் இயக்கிய ‘சின்ன மம்மி, சின்ன டாடி’ என்ற சீரியலும் பெருமளவு வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாம். இந்த சீரியலில் நடிகர் ராஜேஷ், மண்வாசனை பாண்டியன், நடிகை மௌனிகா , காக்கா ரவிச்சந்திரன் என நட்சத்திர பட்டாளமே நடிக்கிற சீரியலாக உருவாகியது.

mangai harirajan

ஒருபக்கம் கே.பாலசந்தரின் கையளவு மனசு, மங்கை ஹரிராஜனின் சின்ன மம்மி, சின்ன டாடி சீரியல் டிஆர்பில் கே.பாலசந்தர் பின்னுக்கும் மங்கை ஹரிராஜன் முதலிடத்திலும் இருக்க பாலசந்தர் டென்ஷனாகி விட்டாராம். யாருடா அவன்? அவன் முதலிலும் நான் இரண்டாம் இடத்திலுமா? என்று பாலசந்தர் அவருடைய அலுவலகத்திலேயே கத்தினாராம். மேலும் இனிமேல் கையளவு மனசு சீரியலை எடுக்க மாட்டேனு சொன்னாராம்.

இதையும் படிங்க : ரஜினிகாந்த் கோடி ரூபாய் வாங்கிய முதல் படம்… அதுவும் யார் எடுத்த படம் தெரியுமா??

balachander

சமாதானம்

இப்படியே அந்த பிரச்சினை ஓய ஒரு காலத்தில் பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்திற்கே ‘ஆனந்தி ’ என்ற சீரியலை இயக்கி கொடுத்தாராம் மங்கை ஹரிராஜன். அந்த சீரியலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini