Connect with us

Cinema News

38 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பலித்த… பாக்யராஜின் தாவணிக்கனவுகள்..!!!

படத்தின் பெயரைப் பார்த்ததும் அந்த ரக படமாக இருக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. குடும்பங்கள் கொண்டாடும் அற்புதமான படம்.

கடமை தவறாத அண்ணனாக வந்து தாய்க்குலங்கள் மத்தியில் பேராதரவைப் பெற்ற பாக்யராஜ்

1984ல் கே.பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் தாவணிக்கனவுகள். ஏழைக்குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்தவர் பாக்யராஜ். படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் ரொம்பவே கஷ்டப்படுகிறார்.

Dhavani kanavugal

இனி உள்ளூர் நமக்கு சரிப்படாது. சம்பாதிக்க முடியாது என்பதை அறிந்து சென்னை கிளம்புகிறார். அங்கு அவரது திறமை அவரை சினிமாவுக்குக் கொண்டு செல்கிறது. கதாநாயகனாக வலம் வரும் பாக்யராஜ் சினிமாவில் சக்கைப் போடு போடுகிறார்.

படத்தில் சினிமாவில் நடிக்க பாக்யராஜூக்கு ஒரு இளம்பெண்ணே உதவுகிறாள். பெரிய நடிகனாக மாறும் பாக்யராஜ் பல லட்சங்களைச் சம்பாதித்துக் கொண்டு கிராமத்திற்கு திரும்புகிறார்.

பெரிய பணக்கார வீட்டு மாப்பிள்ளைகளைப் பார்க்கிறார்;. தனது தங்கைகளுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார். ஆனால் பணக்காரர்களோ பணத்தின் மீதே குறியாக இருக்கின்றனர்.

Dhavani kanavugal

கிராமத்தில் பாக்யராஜின் முன்னாள் நண்பர்களோ தங்கைகளின் மனம் கவர்ந்தவர்களாக இருக்கும் ஏழைகள். இதனால் அந்த மூவருக்கும் தன் தங்கைகளைத் திருமணம் செய்து வைக்கிறார் பாக்யராஜ்.

திறமைசாலிக்கு என்றும் வெற்றி உண்டு என்பதைப் படம் அழுத்தமாக சொல்கிறது. அதே நேரம் பணத்தை விட நல்ல குணமே முக்கியம் என்றும் சொல்கிறது.

அது மட்டுமல்ல குடும்பத்தில் ஒரு அண்ணன் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அவனது இயல்புகள் எப்படி இருக்க வேண்டும்? குடும்பத்தை அவன் எப்படிக் கட்டிக் காக்க வேண்டும் என்பதைப் படம் வெகுநேர்த்தியாக எடுத்துக்காட்டுகிறது.

Dhavani kanavugal2

பாக்யராஜ் உடன் சிவாஜிகணேசன், ராதிகா, இளவரசி, உமா பரணி, நித்யா, பூர்ணிமா, பார்த்திபன், மயில்சாமி, பாரதிராஜா, ராதா, ஊர்வசிஉள்பட பலர் நடித்துள்ளனர்.

இவர்களில் பாரதிராஜாவும், ராதாவும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இவர்களில் மிலிட்டரியாக வரும் நடிகர் திலகம் அசத்தியிருப்பார். போஸ்ட்மேனாக வந்து பார்த்திபன் கவர்கிறார்.

இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம். மாமோய், மாமோய், ஒரு நாயகன், செங்கமலம் சிரிக்குது, வானம் நிறம் ஆகிய பாடல்கள் உள்ளன.

14.9.1984ல் வெளியானது. 38 வருடங்களைக் கடந்தும் அண்ணன்களின் சிறப்பை எடுத்துக்கூறிய இந்தப்படம் இப்போது வரை கொண்டாடப்படும் படமாகவே உள்ளது.

குருநாதர் பாரதிராஜாவும் இந்தப்படத்தில் நடித்துள்ளார். சிஷ்யன் பார்த்திபனும் இந்தப்படத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் பார்த்தால் குருவை இயக்கிய சிஷ்யன் என்றும் சொல்லலாம்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top