உங்கள் கே. பாக்யராஜின் கடைசி படம்!.. ‘டார்க்’ படக்குழுவின் இதய அஞ்சலி!..

 
dark

மறைந்த திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜின் கடைசி படைப்பாக உருவாகியுள்ள 'டார்க்' திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. உளவியல் திகில் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கியுள்ளார். எம்.எஸ்.கே மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் அஜய் கார்த்திக், அஞ்சனா நெத்ரன், நாட்டி நடராஜ் மற்றும் மறைந்த திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே. பாக்யராஜ் திரையுலகில் கடைசியாக நடித்திருக்கும் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

dark

'டார்க்' திரைப்படம், எந்தவித அமானுஷ்ய நம்பிக்கையும் இல்லாத ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதை. மர்மமான கடந்தகாலத்தைக் கொண்ட ஒரு வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்த பிறகு, அவரது வாழ்க்கை எதிர்பாராத பயங்கர சம்பவங்களால் தலைகீழாக மாறுகிறது. அந்த வீட்டின் இருண்ட ரகசியங்கள், மனதை உலுக்கும் உளவியல் அனுபவங்கள் மற்றும் பரபரப்பான திருப்பங்களே படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளன.

மனதை பதறவைக்கும் உளவியல் திகில் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ள 'டார்க்' திரைப்படம், மறைந்த கே. பாக்யராஜை கடைசியாக திரையில் காணும் வாய்ப்பை ரசிகர்களுக்கு வழங்கவிருப்பதால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனித்துவமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

From Around the web