
Cinema News
படம் பார்க்க மறந்துறாம கர்சீப் கொண்டு போங்க.. சென்டிமென்டில் கண்கலங்க வைக்கும் காந்தி கண்ணாடி
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 டைட்டில் வின்னர் தான் பாலா. தனது அனல் பறக்கும் பேச்சால் கவுண்டர் அட்டாக் செய்து காமெடி பன்ச்சால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். இவருக்கு ’பன்ச் பாலா’ என்ற பெயரும் இருக்கிறது.
தொடர்ந்து தன்னுடைய பாணியில் கலக்கிக் கொண்டிருந்த பாலாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே வெள்ளித்திரியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு காமெடியனாக தனது கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை பயன்படுத்தி சில படங்களின் நடித்தார்

தற்போது இவரின் ஆசை நிறைவேற்றும் விதமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக காந்தி கண்ணாடி திரைப்படத்தின் மூலம் அடி எடுத்து வைக்கிறார். இந்த படம் நாளை திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சி பத்திரிக்கை நண்பர்களுக்காக பிரத்தியேகமாக காண்பிக்கப்பட்டுள்ளது. காந்தி கண்ணாடி எப்படி இருக்கிறது என்பதை ஒரு முன்னோட்டமாக பார்க்கலாம்.
காந்தி கண்ணாடி திரைப்படத்தில் கே பி ஒய் பாலா உடன் பாலாஜி சக்திவேல் நடிகை அர்ச்சனா மற்றும் கதாநாயகியாக நமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் அமுதவாணன் கே பி ஒய் வினோத் போன்ற நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரியல் ஹீரோ பாலாஜி சக்திவேல் என்று சொல்லலாம்.

படத்தை அப்படி தாங்கி நிறுத்தி இருக்கிறார். படத்தின் ஒன் லைன் என்னவென்றால் ”ஒருவன் தன்னுடைய மனைவிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான்” என்பதுதான் இதன் ஒன்லைன் ஸ்டோரி. ஒரு பக்கம் பாலா நமீதா காதல் மறுபக்கம் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா கணவன் மனைவிக்கு இடையே மீறிய காதல். பாலாஜி சக்திவேல் சிறுவயதில் ஊரைவிட்டு ஓடி வந்து கல்யாணம் செய்தவர். அவருக்கு ஒரு ஆசை இருக்கிறது.
ஒரு தடவை அறுபதாம் கல்யாணம் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதைப் பார்த்ததும் தனக்கும் இப்படி நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனியை நடத்தி வரும் பாலா, அந்த கல்யாணத்தை அவருடைய நிறுவனம் தான் செய்து கொடுத்திருக்கிறது. உடனே பாலாஜி சக்திவேல் கே பி ஒய் பாலாவிடம் எனக்கும் இதே மாதிரி அறுபதாம் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.
அதற்கு பாலா 50 லட்சம் ரூபாய் கொட்டேஷன் கொடுக்கிறார். அந்த 50 லட்சம் ரூபாயை சாதாரண செக்யூரிட்டி வேலை செய்யும் பாலாஜி சக்திவேல் தயார் செய்தாரா? அந்தக் கல்யாணம் நடந்ததா? இல்லையா? கே பி ஒய் பாலா இந்த கல்யாணத்துக்காக என்னென்ன சூழ்நிலைகளை சந்திக்கிறார்? என்பதை சிறிதும் போர் அடிக்காமல் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு தகுந்த மாதிரி எடுத்திருக்கிறார் இயக்குனர் ஷெரிஃப்.
பாலா ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திலிலேயே சிறப்பாக நடித்துள்ளார். பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா இந்த படத்தை தாங்கி நிப்பாட்டுகிறார்கள். அறிமுக நாயகி நமீதா இந்த படத்தில் பாலாவுடன் முழு மனதுடன் நடிக்க சம்மதித்து கிடைக்கப்பெற்றிருக்கும் கதாபாத்திரத்தை அருமையாக செய்திருக்கிறார். படம் சுவாரசியமாக சென்றாலும் படத்தின் கிளைமாக்ஸ் கண்கலங்க வைக்கிறது.
செண்டிமெண்ட் நிறைந்து பாலாஜி சக்திவேல் வெளிப்படுத்திருக்கும் தத்ரூபமான நடிப்பு நிச்சயமாக ஆடியன்ஸ் கண்களை கலங்க வைக்கும். விவேக் மேர்வின் இசை படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. இயக்குனர் ஷெரிப் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக நிச்சயமாக உருவெடுப்பார். இளம் தலைமுறை இயக்குனர்களில் கொண்டாடப்பட வேண்டியவர் ஷெரிஃப்.