×

க/பெ ரணசிங்கம் படத்தின் சென்சார் குறித்த ருசிகர தகவல்!

விஜய் சேதுபதி நடித்துள்ள க பெ ரணசிங்கம் படத்தின் சென்சார் தகவல்

 

விஜய் சேதுபதி நடித்துள்ள க பெ ரணசிங்கம் படத்தின் சென்சார் தகவல்

விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள க பெ ரணசிங்கம் திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஓடிடி மற்றும் டிடிஎச் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் ரிலீஸாக உள்ளது. ஓடிடியில் ஜி பிளக்ஸில் பே பெர் வியு என்ற முறையில் இந்த படத்தை ஒருமுறை பார்ப்பதற்கு 199 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு ரசிகர்களை அச்சுறுத்தியுள்ளது. இது திரையரங்கு டிக்கெட் விலையை விட அதிகம்.

இதற்கிடையில் படத்தின் ப்ரோமோஷனாக பாடல்கள், அப்டேட் உள்ளிட்டவற்றை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது இப்படத்திற்கு யூ சான்றிதழ்  அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒருவேளை ஓடிடி தளத்தில் மட்டும் வெளிவருவதாக இருந்தால் சென்சார் தேவையில்லை. ஆனால், டிரைவ்-இன் தியேட்டர்களிலும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதால் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News