Kaantha: நல்ல ஒரு கிக் ஸ்டார்ட்! உலகளவில் ‘காந்தா’ படத்தின் முதல் நாள் வசூல்
நேற்று துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தா. பெரிய எதிர்பார்ப்புகளுடன் அந்த படம் வெளியானது. பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் எந்த அளவு வசூலித்து இருக்கிறது என்பதை பற்றிய தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. சமீப காலமாகவே துல்கர் சல்மான் பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூட அவர் தயாரித்து வெளியான லோகா திரைப்படம். மலையாள சினிமாவில் ஒரு பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. வசூலிலும் சாதனை படைத்தது. அதனால் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை நிலைநிறுத்தி வருகிறார் துல்கர் சல்மான். லக்கி பாஸ்கர் திரைப்படத்திற்கு பிறகு துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் தான் காந்தா படம்.
இந்தப் படம் வெளியானதில் இருந்தே இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் கிடைத்திருக்கின்றது. இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் நான்கு கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்பட்டது.
தற்போது கிடைத்த தகவலின் படி உலகளவில் இந்த படம் 10.5 கோடி வசூலித்திருப்பதாக வெளியாகி இருக்கிறது. இனிவரும் நாட்களில் இதனுடைய வசூல் இன்னும் கணிசமாக உயரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மலையாள சினிமாவில் இருந்து சமீப காலமாக பல நல்ல கதைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதை தமிழ் ரசிகர்களும் நல்ல முறையில் வரவேற்கின்றனர். ஏற்கனவே லக்கி பாஸ்கர் திரைப்படம் தமிழில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.அதுமட்டுமில்லாமல் துல்கர் சல்மானுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு அபிப்பிராயமும் இருந்து வருகிறது. காந்தா திரைப்படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் இதுவரை பெரிய ஆதரவை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
