×

கமலாக மாறிய விஜய் சேதுபதி!...‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ....  

 
kaathu vaakkula

போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் இயக்குனராக இடம் பிடித்தார். அவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. அப்படத்தின் படப்பிடிப்பில் அவருக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது. தொடர்ந்து, நயனின் காதலராகவும் ப்ரோமோஷன் பெற்றார்.

nayanthara

தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. படத்தில் இவரின் வெற்றி கூட்டணியான விஜய் சேதுபதி, நயனுடன் சமந்தாவும் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

kaathu

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, கமல், அமலா நடித்த ‘சத்யா’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வலையோசை கலகலகலவென’ பாடலில் பஸ்ஸின் படிக்கட்டில் அமலாவும், அவர் பின்னால் கமல்ஹாசனும் நின்று பயணிக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். அதுபோல, சமந்தாவும், நயன்தாராவும் பேருந்து படிக்கெட்டில் நிற்க விஜய் சேதிபதி நிற்கும் காட்சியை படக்குழு படம்பிடிக்கும் காட்சிதான் வீடியோவாக வெளிவந்துள்ளது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News