×

சொல்லாததையும் செய்து காட்டியவர் முதல்வர் - அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்

 

திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் அருகே செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதை மட்டுமல்ல.. கூறாததையும் செய்து காட்டியவர் என புகழாரம் சூட்டினார். மேலும், அப்படி அவர் என்னென்ன செய்தார் என பட்டியலிட்டார்.
32 வருடங்களுக்கு பின் 2வது முறையாக அதாவது தொடர்ச்சியாக 2016ம் ஆண்டு அதிமுக ஆட்சியை அமைத்தது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.  அவரும் ஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அவர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். மேலும், சொல்லாதத்தையும் அவர் செய்து காட்டியுள்ளார். குறிப்பாக குடிமராமத்து பணிகள் மூலம் நீர்நிலைகள் தூரவாரப்பட்டது. மேலும், காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

ஏழை மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்து அவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியுள்ளார்.  அதேபோல் சமீபத்தில் அம்மா கிளினிக் திட்டத்தை துவங்கி வைத்தார். மேலும், சிறப்பாக செயல்பட்டு  தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.அதில் முக்கியமானது உடன்குடி அனல் மின்நிலைய பணிகள் துரிதப்பட்டு வருவது ஆகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்புடன் ரூ.2500 கொடுப்பதாக அறிவித்துள்ளார். மேலும், கிறிஸ்துவர்களின் கோரிக்கைய ஏற்று ஜெருசலம் புனித பயணத்திற்கு ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்த உதவித்தொகை ரூ.20 ஆயிரத்தை ரூ.37,500 ஆக உயர்த்தி அறிவித்தார் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

மேலும், அதிமுக 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.  திரையரங்குகளில் 100 சதவிதம் இருக்கைகளுக்கு அனுமதி பற்றி பரிசீலிக்கப்படும். தேர்தலை பொறுத்ஹ்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதேபோல், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர். அதில் எந்த மாற்றமுமில்லை. இதை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமே அறிவித்துள்ளார் என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News