காதல் கொண்டேன் படத்தால் என் குடும்பமே - உண்மை உடைத்த தனுஷ் தந்தை!
காதல் கொண்டேன்:
செல்வராகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் காதல் கொண்டேன். இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனியா அகர்வால் நடித்திருந்தார் .
தனுஷின் சினிமா வாழ்க்கையில் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. இந்த நிலையில் இப்படத்தை குறித்து தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
என் குடும்பமே பிழைத்தது:

அதாவது காதல் கொண்டேன் திரைப்படத்தால் தான் எனது குடும்பமே எழுந்து நின்றது. என் மகன் செல்வராகவனுக்கும், தனுஷுக்கும் வெற்றி கொடுத்த படம் அந்த திரைப்படம் தான். அந்த திரைப்படம் எடுக்கும்போது 4 கோடி பட்ஜெட் தேவைப்பட்டது .
ஆனால் எங்களிடமிருந்து ரூ. 2 கோடி தான் இருந்தது. பிறகு நாங்கள் எங்கள் பிள்ளைக்காக கடன் வாங்கி அந்த படத்தை எடுத்தோம். அந்த படம் எதிர்பார்த்ததை விட வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. எனவே இந்த திரைப்படம் தனுஷின் சினிமா கெரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது என கஸ்தூரிராஜா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
