Categories: Cinema News latest news throwback stories

என்னய்யா செஞ்சிருக்க.. யுவனின் மிரட்டும் இசையை கேட்டு வியந்து போன சூப்பர் ஹிட் இயக்குனர்.!

தமிழ் சினிமாவில் நடிகருக்கு இணையாக ஒரு கட்டவுட் வைத்து கொண்டாடும் அளவுக்கு ரசிகர்களை கொண்டுள்ள இசையமைப்பாளர் என்றால் அது வேறு யாருமல்ல யுவன் ஷங்கர் ராஜா தான்.

இவர் பாடல்கள் பிடிக்காத இளைஞர்கள் குறைவு என்றுதான் கூற வேண்டும். இவருடைய பாடல்களுக்கும், மிரட்டும் பின்னணி இசைக்கும் ரசிகர்கள் ஏராளம். யுவனும் – இயக்குனர் செல்வராகவனும் இணைந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ஆல்பம் மிக சிறப்பாக அமைந்திருந்ததுள்ளது.

அப்படி ஒரு சம்பவத்தை யுவன் ஷங்கர் ராஜா ஒரு மேடையில் குறிப்பிட்டார். அதாவது , காதல் கொண்டேன் திரைப்படத்தில் தனுஷ் வாத்தியாரிடம் திட்டு வாங்கி, பதிலுக்கு, போர்டில் அந்த கணக்கை எழுதிவிட்டு, திரும்ப வரும் காட்சியில் மிரட்டலான இசையை கொடுத்து இருப்பர் யுவன்.

இதையும் படியுங்களேன் – மணிரத்னத்தின் சூப்பர் ஐடியா.! கார்த்தி ரெம்ப பாவம்.. பொன்னியின் செல்வன் ஷூட்டிங் சீக்ரெட்ஸ்…

இதனை குறிப்பிட்டு செல்வராகவன் , யுவனிடம், ‘ யோ, என்னய்யா பண்ணி வச்சிருக்க.? எனக்கு அப்படியே பாரு புல்லரிக்குது. ‘ என மெய் சிலிர்த்து போனாராம். இதனை யுவன் அந்த பேட்டியில் குறிப்பிட்டு பேசினார். உண்மையில், காதல் கொண்டேனில் அந்த காட்சி மட்டுமல்ல, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என பெரும்பாலான படங்களில் இசை மிரட்டி இருப்பார் யுவன்.

Manikandan
Published by
Manikandan