×

காதல் பட நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் - ஆட்டோவில் சடலமாக மீட்பு

 
காதல் பட நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் - ஆட்டோவில் சடலமாக மீட்பு

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் காதல். இப்படத்தில் சென்னையில் சினிமாவில் வாய்ப்பு தேடும் வாலிபராக ‘விருச்சககாந்த்’ வேடத்தில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தவர் பாபு. நடிச்சா ஹீரோதான் சார். நான் வெயிட் பண்றேன் சார்.. என அவர் பேசிய வசனம் செம பேமஸ்..

அப்படத்திற்கு பின் சரியான வாய்ப்புகள் இன்றி அவர் சென்னையில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார். அவருக்கு சினிமா துறையை சேர்ந்த சிலர் உதவி செய்தனர். ஆனாலும், அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் வாழ்ந்து வந்தார்.

kadhal babu

இந்நிலையில், ஆட்டோவில் படுத்து உறங்கி வந்த அவர் தூக்கத்திலேயே மரணம் அடைந்துள்ளார். ஏற்கனவே, ரேனிகுண்டா பட நடிகர் தீப்பெட்டி கணேசன் உயிரிழந்த நிலையில், பாபுவின் மரணமும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News