Categories: Cinema News latest news throwback stories

தொடர் பிரச்சனைகளை சந்தித்த காதலிக்க நேரமில்லை படம்… போராடி வெளியாகிய சோகம்..

தமிழ் சினிமாவில் பல பிரச்சனைகள் சந்தித்து திரைக்கு வந்த காதலிக்க நேரமில்லை படம் அப்படக்குழுவிற்கு ஒரு ஆச்சரியத்தினை கொடுத்திருக்கிறது.

1964ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. சி.வி. ஸ்ரீதர் தயாரித்து இயக்கியது மட்டுமல்லாமல் சித்ராலயா கோபுவுடன் இணைந்து படத்தின் திரைக்கதையையும் எழுதினார். பாலையா, முத்துராமன், நாகேஷ், ராஜஸ்ரீ, சச்சு ஆகியோர் படத்தின் முன்னணி கதாபாத்திரமாக நடித்திருந்தனர்.

காதலிக்க நேரமில்லை

ஈஸ்ட்மேன்கலரில் வெளியான முழு நீள தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். படம் தெலுங்கில் பிரேமிஞ்சி சூடு என்ற பெயரிலும், இந்தியில் பியார் கியே ஜா என்றும், கன்னடத்தில் ப்ரீத்தி மது தமாஷே நோடு என்றும், மராத்தியில் தூம் தாடகா என்றும் ரீமேக் செய்யப்பட்டது. படம் மிகப்பெரிய வசூல் வேட்டையினை நடத்தியது. தொடர்ந்து 175 நாட்கள் திரையரங்கில் ஓடி சாதனை புரிந்தது.

இதையும் படிங்க: அந்தக்காலத்தில் எம்ஜிஆர் – சிவாஜி படங்களின் மோதல்கள் எப்படி இருந்தது தெரியுமா?

ஆனால் இத்தனை சாதனைகளுக்கு முன்னாலும் பெரிய போராட்டத்தினையே இயக்குனர் ஸ்ரீதர் சந்தித்து இருக்கிறார். முதல் பிரச்சனை பூஜையில் துவங்கியது. ஸ்ரீதரின் ஆசையின்படி ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டின் மகனை கேமராவினை ஆன் செய்ய ஏற்பாடு நடைபெற்றது. ஆனால், பூஜை துவங்கிய நேரத்தில் வின்செண்ட் மகன் செட்டில் இல்லை. பூஜை செய்ய வேண்டிய ஐயரும் இல்லை.

சி.வி.ஸ்ரீதர்

இதனால் இயக்குனர் ஸ்ரீதரே சாமிக்கு ஆரத்தி எடுத்திருக்கிறார். ஆனால் அதுவும் அணைந்து விட்டதாம். இப்படி தொடர் தடங்கலால் படக்குழு அதிர்ந்துள்ளது. என்ன தொடர் அபசகுணமாக உள்ளதே எனப் பேசப்பட்டதாம். படப்பிடிப்பு துவங்கினால் ஒரு காட்சியில் கேமராவின் பெல்ட்டும் அருந்து விழுந்து விட்டதாம். ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் இந்த பிரச்சனைகளால் கொஞ்சம் கூட மனம் தளரவில்லை. தொடர்ந்து படப்பிடிப்பினை நடத்தினார். அவர் உழைப்பே படத்தினை வெற்றி வழிக்கு அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily