Categories: Cinema News latest news

குடும்ப படத்தை வெளியிட்ட காஜல்.. அக்காவும், தங்கச்சியும் ரெம்ப அழகா இருக்காங்க!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்து வெளியான ‘பழநி’ படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் காஜல்.

இதன்பின் பொம்மலாட்டம், சரோஜா, மோதி விளையாடு ஆகிய பங்களில் நாயகியாக நடித்திருந்தார். ஆனால், இவர் நடித்த எந்தப்படமும் சரியாக ஓடடாததால், இவர் யாராலும் பரவலாக அறியப்படவில்லை. பின்னர் இவர் நடிப்பில் வெளியான நான் மகான் அல்ல படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பின் விஜய்யுடன், துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், அஜித்துடன் விவேகம் என பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இவர், திருமணத்திற்குப் பின்னும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவருக்கு நிஷா அகர்வால் என்ற ஒரு தங்கை இருக்கிறார். இவர் விமலுக்கு ஜோடியாக இஷ்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அக்கா, தங்கை இருவரும் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார் காஜல்.

kajal agarwal family

தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது இந்தப்படம் அதிகமான லைக்குகளை பெற்று வருகின்றது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அக்காவும், தங்கையும் செம அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்