×

அப்பா வயது நடிகருக்கு ஓகே சொன்ன காஜல் அகர்வால்... என்னங்க இப்படி மாறிட்டீங்க... 
 

நடிகை காஜல் அகர்வால் தனது அடுத்த படத்தில் அப்பா வயது நடிகருக்கு ஓகே சொன்னதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 
 
 
அப்பா வயது நடிகருக்கு ஓகே சொன்ன காஜல் அகர்வால்... என்னங்க இப்படி மாறிட்டீங்க...

கோலிவுட்டில் பழனி படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை காஜல் அகர்வால். அப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, கார்த்தி போன்றவர்களுடன் ஜோடி போட்டு இருக்கிறார். தொடர்ந்து பிஸியாக நடித்து வந்தவருக்கு, சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. தொழிலதிபரான கௌதம் கிட்சுலுவுடன் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி மும்பையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும், காஜலுக்கு நல்ல வாய்ப்புகள் தான் வந்தது. 

இந்நிலையில், அப்பா வயது நடிகர் நாகார்ஜூனாவுடன், காஜல் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் இதுவரை ஜோடியாக நடிக்கவில்லை. இந்த வாய்ப்பு வந்தப்போது, காஜலுக்கு திருமணம் ஆனதாலே இப்படி அப்பா வயது நடிகருக்கு ஜோடி போடக் கூப்பிடுகிறார்கள் என தனது வட்டாரத்தில் புலம்பி இருக்கிறார் நடிகை காஜல். இருந்தும், தெலுங்கில் ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவிக்கு நாயகியாகவும், விஷ்ணு மஞ்சுவுடன் மொசகல்லு போன்ற படங்களை முடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News