×

சுத்தமா தூங்கவே இல்ல... லைவ் டெலிகாஸ்ட் திகில் அனுபவம் பகிரும் காஜல் அகர்வால்

வெங்கட் பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்திருக்கும் `லைவ் டெலிகாஸ்ட்’ ஹாரர் வெப் சீரிஸ் ஹாட்ஸ்டாரில் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகிறது. 
 

மிகப்பெரிய ஹிட் அடிக்கும் புரோகிராம் ஒன்றை எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் குழு ஒன்று பேய் ஆதிக்கம் செலுத்தும் வீட்டில் சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸ் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த வெப் சீரிஸில் காஜல் அகர்வாலுடன், வைபவ், கயல் ஆனந்தி, பிரியங்கா, செல்வா, டேனியல் ஆன்னி போப், சுப்பு பஞ்சு அருணாச்சலம் என பெரிய ஸ்டார் கேஸ்டிங்கே நடித்திருக்கிறார்கள். 


இதில் நடித்த அனுபவம் குறித்து காஜல் அகர்வால் பேசுகையில், `இந்த வெப் சீரிஸுக்காக நாங்கள் ஷூட் பண்ண இடம் மிகவும் பொருத்தமானது. அது வெங்கட் பிரபு சாருடைய நண்பரின் வீடு. மலை உச்சியில் மிகவும் தனிமையான இடத்தில் அது அமைந்திருந்தது. வீட்டைச் சுற்றி பல கி.மீ தூரத்துக்கு எதுவும் இல்லை. எல்லாமே காடுகள்தான். 

வெப் சீரிஸுக்கு அது ஏற்ற வீடுதான்... ஆனால், நாங்கள் பல நாட்களாகத் தூங்கவேயில்லை. ஷூட்டிங் முடிந்தபிறகு நான் ரொம்பவே பயந்துவிட்டேன். தூக்கத்தில் பயந்து பலமுறை நடுவில் எழுந்து உட்கார்ந்திருக்கிறேன். அது மிகவும் திகிலான அனுபவம். மற்றபடி, செட்டிலும் வெளியிலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்தாகவே எனக்குத் தோன்றியது’ அதிர்ச்சி விலகாமல் பேசியிருக்கிறார். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News