×

எனக்கு இந்தப் பிரச்சனை... அசிங்கப்பட என்ன இருக்கு... காஜல் அகர்வால் போல்ட் ஸ்டேட்மெண்ட்

நடிகை காஜல் அகர்வால் சிறுவயது முதலே தான் சந்தித்து வரும் பிரச்னை குறித்து முதல்முறையாக மனம்திறந்திருக்கிறார். 
 
 

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால் கௌதம் கிச்சுலு என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நடிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் லைவ் டெலிகாஸ் வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டல் திரையில் முதல்முறையாக அறிமுகமாக இருக்கிறார். 


இதன் ரிலீஸுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் காஜல் அகர்வால், தான் சிறுவயது முதலே சந்தித்து வரும் பிரச்சனை குறித்து மனம்திறந்திருக்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கும் காஜல் அகர்வால், `எனக்கு 5 வயதாக இருந்தபோது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின்னர் என் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டி வந்தது. குறிப்பாக உணவு விஷயத்தில் ஏகப்பட்ட கண்டிஷன்கள். நினைத்துப் பாருங்கள் உங்கள் சிறுவயதில் பால் பொருட்கள் மற்றும் சாக்லேட் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது என்ற ஒரு சூழல் வந்தால் எப்படி இருக்கும்... அது சாதாரண விஷயமில்லை. 


ஆனால், அதை எதிர்க்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வந்தேன். குளிர், தூசு உள்ளிட்டவைகளின் போது மிகவும் சிரமமாக இருக்கும். அதன்பிறகு இன்ஹேலர்கள் பயன்படுத்தியதன் மூலம் எனது உடல்நிலை சீரானது. இப்போதும் எங்கு சென்றாலும் கூடவே இன்ஹேலர்களை மறக்காமல் எடுத்துச் செல்கிறேன். மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்பதற்காக இன்ஹேலர்கள் பயன்படுத்தாமல் இருக்காதீர்கள். எனக்கு இந்தப் பிரச்சனை இருக்கு. இதில், வெட்கப்பட என்ன இருக்கு. மற்றவர்களுக்காக நீங்கள் எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பொது இடமோ, தனிப்பட்ட இடமோ இன்ஹேலர்களைப் பயன்படுத்தத் தயங்க வேண்டாம்’’ என்று உணர்ச்சிப்பூர்வமாக காஜல் அகர்வால் பதிவிட்டிருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News