வில்லியாக நடிப்பது ஓக்கேதான்... ஒரே ஒரு கண்டிஷன்... காஜல் அகர்வால் ஓப்பன் டாக்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், லாக்டவுன் சமயத்தில் திடீரெனத் திருமணம் செய்துகொண்டார். கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் போன காஜல், பகிர்ந்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.
இப்போது கணவருடனான காதல், திரைப்பயணம் குறித்து பேசியிருக்கிரார் காஜல். அவர் கூறுகையில், `எனது கணவரை 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். முதலில் ஃபிரண்ட்ஸாகப் பழகினோம். பின்னர், அது காதலானது. லாக்டவுன் சமயத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று தோன்றியது. உடனே திருமணம் செய்துகொண்டோம். எங்க லவ் ஸ்டோரியிலேயே ஒரு படம் எடுக்கும் அளவுக்கு சுவாரஸ்யம் இருக்கிறது.
திரைப் பயணத்தைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பிறகு எதுவும் மாறவில்லை. முன்னைவிட இப்போது மரியாதை தருகிறார்கள். கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் நான் எந்த வித்தியாசமும் பார்ப்பதில்லை. லவ் ஸ்டோரி, வரலாற்றுக் கதை, காமெடி ஸ்கிரிப்டுகளில் நடிப்பதில் ஆர்வம் இருக்கிறது. வில்லியாக நடிப்பதில் கூட எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனால், கதை பிடித்திருக்க வேண்டும்’’ என்று பேசியிருக்கிறார்.