×

இந்தியன் 2 ஷூட் பாதியில் நிற்க இதுதான் காரணம்... போட்டுடைத்த காஜல் அகர்வால் 

இந்தியன் - 2 படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருப்பதற்கான உண்மையான காரணம் குறித்து நடிகை காஜல் அகர்வால் பேசியிருக்கிறார். 
 
 
இந்தியன் 2 ஷூட் பாதியில் நிற்க இதுதான் காரணம்... போட்டுடைத்த காஜல் அகர்வால்

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் மாஸ் ஹிட்டடித்த இந்தியன் படத்தின் அடுத்த பாகம் இந்தியன் - 2 என்ற பெயரில் அறிவிக்கப்பட்டது. படத்தின் செட்டில் கடந்த 2020 பிப்ரவரியில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

அதன்பிறகு கொரோனா சூழலால் படப்பிடிப்பைத் தொடர முடியவில்லை. லைகா புரடக்‌ஷன்ஸ் மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தபிறகு கமல் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், விக்ரம் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டே கமல் இதில் கலந்துகொள்வார் என்றும் தகவல் பரவியது. 


இந்தநிலையில், படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார். ஹைதராபாத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றில் பேசிய காஜல், `இந்தியன் - 2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருப்பதற்கான காரணம், படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் பெரும்பாலானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். கொரோனா சூழலால் அவர்களால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. அதனாலேயே ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது’ என்று தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்காக காஜல் அகர்வால் களரிப் பயட்டு கலையைக் கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. காஜலுடன் ப்ரியா பவானி சங்கர், ராகுல் ப்ரீத்சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், விவேக் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News