5 வயசு குழந்தைக்கு அம்மா... ஆனாலும் குறையாத அழகில் காஜல் அகர்வால்!
காஜல் அகர்வால்:
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். மும்பை மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் முதன்முதலில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்த லட்சுமி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக நான் மகான் அல்ல, மாற்றான், ஆல் இன் ஆல் அழகு ராஜா, துப்பாக்கி, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் காஜல் அகர்வாலின் தமிழ் சினிமாவில் நிலைத்து பேசக்கூடிய திரைப்படங்களாக இருந்து வருகிறது.

கிளாமர் புகைப்படங்கள்:
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த காஜல் அகர்வால் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவது போல் தெரிகிறது. ஆம் சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அழகிய கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு அனைவரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார். இவங்கள பார்த்தால் 5 வயசு குழந்தைக்கு அம்மான்னு அடிச்சு சொன்னா கூட நம்ப முடியலப்பா என்ன ரசிகர்கள் அழகை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
