×

காதலர் தினத்தை வித்தியாசமாக கொண்டாடிய காஜல்... எங்கு தெரியுமா?  

காஜல் அகர்வால் கொண்டாடிய காதலர் தினம் குறித்து சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
 
 

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து, காஜல் தொழிலதிபர் கௌதம் கிட்சுலுவை கடந்த அக்டோபர் மாதம் திருமணம் மும்பையில் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துக் கொண்டார்.

தொடர்ந்து, தனது கணவருடனான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் காஜல். இந்நிலையில், காதலர் தினத்தில் எங்கு சென்று இருப்பார் எனப் பலரும் ஆவலாக காத்திருந்தனர். அம்மணி கணவரை கூட்டிச் சென்றதோ வித்தியாசமான ஒரு இடத்திற்காம். பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் எனும் ஒரு சிறிய உணவகத்துக்கு கணவரை அழைத்து சென்று இருக்கிறார். அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் காஜல், நான் இருப்பது எனது பேவரிட் சாந்தி உணவகம் தான். மிகவும் பாசத்தோடு சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா எங்களுக்கு  உணவை பரிமாறினார்கள். கடந்த 27 வருடங்களாக சுவை மாறாமல் அருமையாக இந்த உணவகத்தை நடத்தி வருகிறார்கள். கடந்த 9 ஆண்டுகளாக நான் இந்த உணவகத்திற்கு வந்து செல்கிறேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News