×

எனக்கு கண்ணாலமா? மாப்பிள்ளைய காட்டுங்கடா ப்ளீஸ்... கலாத்து தள்ளிய ரசிகர்கள்

உங்களுக்கு கண்ணாலமா, எங்களுக்கு எல்லாம் சொல்லவே இல்லையே டான் என்று அவரின் ரசிகர்கள், ரசிகைகள் கேட்டனர். அதன் பிறகே அது வெறும் வதந்தி என்பது அவர்களுக்கும் புரிந்தது.

 
2fbd1e30-137f-4b14-af44-8525aa3b2740

உலக நாயகன் கமல் ஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலம் நடிகையானவர் காஜல் பசுபதி. ட்ரீம்ஸ், இதயத் திருடன், சிங்கம், கோ, மௌன குரு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கலகலப்பு 2.

காஜல் பசுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டவர். அவர் ட்விட்டரில் சூப்பர் ஆக்டிவாக இருப்பார். சினிமா தவிர்த்து நாட்டு நடப்புகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் பிராங்க் செய்ய, திடீரென நிச்சயம் முடிந்துவிட்டது...அடுத்த வாரம் திருமணம்...என்று ஒரு மெசேஜை காப்பி பேஸ்ட் செய்தார். அதை பார்த்தவர்கள் காஜல் பசுபதிக்கு மீண்டும் திருமணம் நடக்கப் போகிறது என்று தவறாக புரிந்து கொண்டுவிட்டார்கள்.

இதை பார்த்த காஜல் பசுபதி, என்னய்யா இது பிராங்க் பண்ணபோக இப்படி ஆகிடுச்சு என்று கூறி விழுந்து விழுந்து சிரிக்கும் எமோஜியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அக்கா, உங்களுக்கு கண்ணாலமா, எங்களுக்கு எல்லாம் சொல்லவே இல்லையே டான் என்று அவரின் ரசிகர்கள், ரசிகைகள் கேட்டனர். அதன் பிறகே அது வெறும் வதந்தி என்பது அவர்களுக்கும் புரிந்தது.

மேலும் காஜல் பசுபதிக்கு திருமணம் என்று கூறியவர்களை அவரின் ரசிகர்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News