Categories: Cinema News latest news throwback stories

அதிகமா காட்டுனா அதிக காசு தருவாங்க! – பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டாரே காஜல் பசுபதி!…

தமிழ் சினிமாவில் வெகு காலமாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகைகளில் காஜல் பசுபதி முக்கியமானவர். எதார்த்தமாக படப்பிடிப்புகளை வேடிக்கை பார்க்க வந்து அப்படியே துணை கதாபாத்திரங்களில் இவர் நடிக்க துவங்கினார்.

தமிழ் திரைத்துறையில் பெரும் கதாநாயகர்களாக இருக்கும் விமல், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களே ஹீரோ ஆவதற்கு முன்பு சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர்கள்தான். செல்லமே படத்தில் முதன் முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிய காஜல் பசுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இதுவரை 20க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவர் பேட்டி ஒன்றில் பேசும்போது பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசியிருந்தார். அப்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களின் நிலைமை குறித்தும் விளக்கியிருந்தார்.

செல்லமே திரைப்படத்தில் நடிக்கும்போது அவருக்கு கொடுத்த சம்பளம் 600 ரூபாய். இந்த மாதிரி சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிப்பவர்களுக்கு ஒரு நாள் கூலி என்பது குறைவாகதான் இருக்கும்.

அதே போல கவர்ச்சி பாடல்களில் ஆடுபவர்களுக்கு ஆடையை பொறுத்துதான் சம்பளம் வழங்குகின்றனர். எந்த அளவிற்கு அவர்கள் கவர்ச்சியாக தெரியும்படி ஆடைகளை குறைவாக உடுத்துகிறார்களோ அந்த அளவிற்கு சம்பளம் அவர்களுக்கு அதிகமாக இருக்கும். அதிக ஆடை உடுத்தியிருந்தால் குறைவான சம்பளமே கிடைக்கும். என கூறியுள்ளார் காஜல் பசுபதி

தமிழ் சினிமாவில் கவர்ச்சி பாடல்களுக்கு பின்னால் இருக்கும் சர்ச்சைக்குரிய அரசியலை அந்த பேட்டியில் காஜல் பசுபதி வெளிப்படுத்தியிருந்தார்.

Rajkumar
Published by
Rajkumar