×

திடீரென திருமண அறிவிப்பை வெளியிட்ட சாண்டி முன்னாள் மனைவி...

கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல. தப்பா எடுத்துக்காதிங்க’ என்று டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
 
16d8028e-0118-47e1-acc9-495b67a82e94

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகை காஜல் பசுபதி. வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆரம்பித்து போலிஸ், நர்ஸ் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து பிரபல தொலைக்காட்சியில் ஜோடியாக போட்டிபோட்டு நடனமாடி மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் சேண்டி மீது காதல் ஏற்பட்டது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டு சில கருத்து வேறுபாடுகளால் சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர்.

பிரிந்தபின் சேண்டி மாஸ்டர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறினார். தற்போது தனிமையில் இருந்து வரும் காஜல் பசுபதி டிவிட்டரில் எப்போது ஆக்டிவாக இருந்து கருத்துக்களை கூறி வருகிறார்.

இந்நிலையில்,’திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் திருமணம். கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல. தப்பா எடுத்துக்காதிங்க’ என்று டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இதற்கு பலர் நண்பர்களும் நெட்டிசன்களும் வாழ்த்துக்கள் கூறியும் இது உண்மையா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News