×

காஜல் ஸ்லிம்மாக இருக்க இது தான் ரகசியம்...

காலையும் மாலையும் ஏர்ல் கிரே டீ குடிப்பது ரொம்பவும் பிடித்த விஷயமாம் காஜலுக்கு. மதிய உணவு போலவே இரவு உணவும் கொஞ்சமாக சாப்பிடுவாராம்.

 
671af171-11c6-4a9c-be08-f1168616ae95

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். தெலுங்கு, ஹிந்தியிலும் தொடர்ந்து படங்கள் நடித்தார்.

எல்லா மொழிகளிலும் டாப் ஹீரோக்களுடன் படங்கள் நடித்துள்ளார். தற்போது அவர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார், கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் நடிகை காஜல் அகர்வால் நடிப்பை நிறுத்திவிட்டு தனது கணவரின் தொழிலை சேர்ந்து கவனிக்க இருப்பதாக தகவல்கள் வந்தன, எந்த அளவிற்கு அது உண்மை என்பது தெரியவில்லை.

தற்போது நடிகை காஜல் ஸ்லிம்மாக இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. ஒல்லியாக இருக்க அவர் உணவு முறையில் நிறைய விஷயங்களை பின்பற்றி வருகிறாராம்.

காலையில் ஒரு முட்டையுடன் ஆரம்பமாகும் அவரது காலை உணவு ஒரு மணி நேரம் கழித்து ஜோவர் ரொட்டி சாப்பிடுவாராம். மதிய உணவுக்கு முன்பாக சில பழங்களை உண்பாராம்.

மதிய உணவாக சாதம், பருப்பு, காய்கறிகள் அடங்கிய உணவு. பானமாக அருந்த வேண்டும் என்றால் புரேட்டீன் ஷேக்ஸ் அல்லது இளநீர் மட்டும் தான் குடிப்பாராம்.

காலையும் மாலையும் ஏர்ல் கிரே டீ குடிப்பது ரொம்பவும் பிடித்த விஷயமாம் காஜலுக்கு. மதிய உணவு போலவே இரவு உணவும் கொஞ்சமாக சாப்பிடுவாராம். ஒரு முழுமையான வெஜிடேரியன் உணவு உட்கொள்பவர்.

தினசரி உணவில் நார்ச்சத்து, புரோட்டீன், கார்போஹைட்ரேட்ஸ் அடங்கிய உணவுகள் தான் அவர் வழக்கமாக எடுப்பாராம்.

From around the web

Trending Videos

Tamilnadu News