×

காஜலுக்கு விரைவில் டும் டும் டும் கெட்டிமேளம்... அட மாப்பிள்ளை இவர் தானா?

காஜல் அகர்வால் நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். காஜல் அகர்வாலின் தங்கையான நிஷாவும் அக்கா வழியில் நடிகை ஆனார்.
 


சிறிது காலம் நடித்த நிஷா தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகினார். நிஷா அகர்வாலுக்கு ஒரு மகன் இருக்கிறார். 35 வயதாகும் காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் விரும்புகிறார்கள்.

இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்ததம் நடந்துவிட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியானது. அந்த நிச்சயதார்த்தத்தில் காஜலின் நெருங்கிய நண்பரான தெலுங்கு நடிகர் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா கலந்து கொண்டதாக பேசப்பட்டது. ஆனால் நிச்சயதார்த்தம் குறித்து காஜல் எதுவும் தெரிவிக்கவில்லை.

தற்போது காஜலுக்கும், கவுதமுக்கும் விரைவில் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கவுதம் ஒரு தொழில் அதிபர், இன்டீரியர் டிசைனராக உள்ளார். மாரதானிலும் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். காஜல், கவுதமின் திருமணம் மும்பையில் நடக்கவிருக்கிறதாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News