மகன் பிறந்தநாளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் கார் பரிசளித்த கலா மாஸ்டர்

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநராகவும், அண்மையில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகளின் நடுவர் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருபவர்
 
kala master

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடன இயக்குநராகவும், அண்மையில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகளின் நடுவர் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருபவர்  கலா மாஸ்டர்.  ரஜினி முதல் இன்றைய நடிகர்கள் வரை பலரையும் ஆட வைத்தவர் இவர்.  திரையுலகில் பல்வேறு சாதனைகளை செய்த இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர்.

இந்த நிலையில் கலா மாஸ்டர் தனது மகன் பிறந்த நாளையொட்டி அவருக்கு சர்ப்ரைஸாக  ரூ.21 லட்சம் மதிப்பிலான புதிய  மஹிந்திரா தார் காரைப் பரிசளித்து அசத்தியுள்ளார். தாய் அன்பிற்கும் பாசத்திற்கும் ஈடுஇணை எதுவும் இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அமைந்த இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  சந்தையில் ரூ.18 லட்சம் முதல் ரூ.21 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகும் இந்த மஹிந்திரா தார் கார், இளைஞர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படும் வாகனங்களில் ஒன்று. மகனின் ஆசையை நிறைவேற்ற்றிய கலா மாஸ்டருக்கு பல்ரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Tags

From Around the web