Categories: Cinema News latest news throwback stories

அவர் மட்டும் கலைஞர் இல்ல.. நானும் கலைஞர் தான்!..சோ வின் இந்த பேச்சால் மேடைய அலறவிட்ட கருணாநிதி!..

மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி என திரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர். பராசக்தி தவிர்க்க முடியாது 1952ல் கலைஞர் கருணாநிதிக்கு வயது 28. தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது கலைஞர் தான். கலைஞரின் திராவிட கொள்கைகள் சார்ந்த வசனங்கள் தமிழகத்தில் எழுச்சியை உண்டுபண்ணியது. குறிப்பாக பராசக்தி படம் முழுக்க அனல் பறக்கும் வசனங்கள் இருந்தன. நீ ஏழையாக ஆக்கப்படாவிட்டால் ஏழையைக் கூட நினைத்துக் கூட பார்க்கமாட்டாய்… மலைப்பாம்பை அடக்க மகுடி ஊதுகிறாய்…என்று சிவாஜியின் தங்கை பேசும் வசனம் அனல் பறக்கும்.

இப்படி அனல்பறக்கும் வசனங்களை தெறிக்கவிடும் கருணாநிதியின் உள்ளே நகைச்சுவையுணர்வும் பொதிந்து இருக்கும். இவர் எழுதிய வசனங்களை திருத்தும் அதிகாரம் யாருக்கும் கிடைக்க அனுமதிக்க மாட்டார் கலைஞர். ஆனால் ஒருத்தருக்கு மட்டும் அனுமதி வழங்கினார். அது யாரென்றால் பத்திரிக்கையாளரும் நடிகருமான சோ.ராமசாமி தான்.

இதையும் படிங்க : 70 ஆண்டுகளைக் கடந்தும் இளமை மாறாத பராசக்தி…என்னா வசனம்பா எழுதிருக்காரு கலைஞர்?!

கலைஞர் வசனத்தில் ஒரு படத்தில் சோ நடிக்க கலைஞர் வசனத்தில் சோ வும் சொந்தமாக சில வசனங்களை பேசினார். ஆனால் இதை கண்டு கோபப்படாத கலைஞர் அதை அனுமதித்தார். ஒரு கட்டத்தில் பெரிய பத்திரிக்கையாளராக உயர்ந்த சோ, ஒரு விழாவிற்கு தலைமைக்காக கலைஞருடன் சென்றிருந்தாராம். விழா மேடையில் ம.பொ.சி பேசும் போது சோ வின் கலையுணர்வை மதித்து அவரை ‘கலைஞர் சோ’ என்று வர்ணித்தாராம்.

அதன் பின் பேசிய சோ இனிமேல் நானும் கலைஞர் தான். அதை ம.பொ.சி யே கூறிவிட்டார். இதிலிருந்து என் வாய் வழியாக என்ன வார்த்தைகள் வந்தாலும் அது கலைஞர் கருணாநிதியின் வார்த்தைகளே என கூறினாராம் சோ. இவரை அடுத்து பேச வந்த கலைஞர், சோ வை பார்த்து ‘வணக்கம் கலைஞர் சோ அவர்களே’ என்று கூற அரங்கமே ஒரே சிரிப்பலையில் மிதந்து விட்டதாம். அந்த அளவுக்கு கலைஞருக்குள் நகைச்சுவையுணர்வு இருப்பதை இந்த பதிவு உணர்த்துகிறது. இதை சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini