பாகுபலி மாதிரி ரெண்டு மடங்கு!.. STR 48 புயல் மாதிரி வரும்!.. ஹைப் ஏத்தும் தாணு!...
STR 48: மாநாடு, பத்து தல ,வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்து கமர்சியல் பேக்கேஜ்களாக கொடுத்து வந்த சிம்பு ரசிகர்களுக்கு ஒரு பெரிய நம்பிக்கையை ஊட்டினார். இனிமேல் என் தலைவன் ஆட்டத்தை பார்க்க போறீங்க என சிம்பு ரசிகர்களும் ஆரவாரத்தில் இருந்தனர் அதே சூட்டோடு ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து சிம்பு ஒரு படத்தில் இணைந்தார். அந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி இந்த கதையை ரஜினியிடம் சொல்லி ரஜினிகாந்துக்காக எழுதப்பட்ட கதை என்றும் அதில் ரஜினி நடிக்க முடியாமல் போனதால் அது சிம்புவுக்கு கைமாறப்பட்டது என்றும் ஒரு தகவல் வெளியானது.
இதுவும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த படம் பெரிய அளவில் வரப் போகிறது. இனிமேல் என் தலைவன் மாஸ் காட்டப் போகிறான் என ஆட்டம் போட்டனர் சிம்பு ரசிகர்கள். ஆனால் அறிவிப்பு வெளியானதோடு சரி. ப்ரீ புரடக்ஷன் வேலைகள் எதுவுமே ஆரம்பிக்கப்படாமல் இருந்தன. கிட்டத்தட்ட ஆறு மாத காலம் இந்த படம் அப்படியே முடங்கி கிடந்தது. ஆனால் இந்த படத்திற்காக சிம்பு கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோ மட்டும் வெளியாகி கொண்டே இருந்தது. அதுவும் ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஏதோ பண்ணப் போகிறார் சிம்பு என்றெல்லாம் மிகவும் ஆர்வமுடன் காத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் திடீரென கமலுடன் தக் லைப் படத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகி இந்தப் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இருந்தாலும் கமல் தயாரிப்பில் நடிக்கவில்லை என்றால் என்ன கமலுடன் சேர்ந்து நடிக்கிறாரே என்ற வகையில் அவருடைய ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர். தக் லைப் படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. அதன் பிறகாவது எஸ்டிஆர் 48 படத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்த்த போது அதில் ஒரு பெரிய ரிஸ்க் இருக்கிறது என்ற ஒரு தகவல் வெளியானது.
இந்தப் படத்திற்கான பட்ஜெட் அதிக அளவில் இருக்கும் என்பதால் தான் இதனுடைய பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தை கைவிட்டு விட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இந்த படத்தை எப்படியாவது எடுத்தாக வேண்டும் என்ற ஒரு முயற்சியில் சிம்பு இருக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவதாகவும் சொல்லப்பட்டது.
இதற்கிடையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் கலைபுலி எஸ். தாணு இந்த படத்தை பற்றி ஒரு தகவலை சமீபத்திய ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். தேசிங்கு பெரியசாமி முதலில் இந்த கதையை இவரிடம் தான் சொன்னாராம். உடனே தாணுவும் தெலுங்கு, ஆந்திரா, கன்னடா, தமிழ் ஆகிய மொழிகளில் இருக்கும் உச்சபட்ச நடிகர்களை இந்த கதையை கேட்க வைத்திருக்கிறார். அந்த நடிகர்களுக்கெல்லாம் இந்த கதை மிகவும் பிடித்து போய்விட்டதாம்.
ஆனால் நேரம் சிரத்தை இவையெல்லாம் பார்க்கும் பொழுது இந்த படத்தை எடுக்க இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அந்த நடிகர்கள் எல்லாம் யோசித்து இருக்கிறார்கள். அதன் பிறகு தேசிங்கு பெரியசாமி இந்த கதையை சிம்புவிடம் போய் சொல்லி இருக்கிறார் .அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்துப் போக உடனே சிம்பு கலைப்புலி தாணுவுக்கு போன் செய்து இதை பண்ணலாமே எனக் கேட்டாராம்.
ஆனால் பட்ஜெட் என்பதை தாண்டி இந்த படம் பாகுபலி போன்ற ஒரு கதை. சரியான ஒரு நபர் இந்த படத்திற்கு கிடைத்தால் பாகுபலி படம் போல இரண்டு மடங்கு இந்த படம் கண்டிப்பாக வரும். இது சிம்புவுக்கும் பெரிய அளவில் பேர் வாங்கிக் கொடுக்கும். அதனால் கண்டிப்பாக இந்த படம் வந்தே ஆகும். அதற்குள் தேசிங்கு பெரியசாமி சின்னதாக ஒரு படத்தை முடித்துவிட்டு இன்னும் தைரியத்துடன் இந்த படத்தை கையில் எடுப்பார் என தாணு கூறி இருக்கிறார்.