தமிழ் நடிகர்களில் மிக முக்கியமான ஒரு நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிக்கும் திரைப்படங்கள் பல கோடிகளுக்கு ஹிட் அடிப்பதால் தொடர்ந்து அஜித் படத்திற்கு மார்க்கெட் அதிகரித்துக்கொண்டே வருகிறது. துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கத்தில் படம் நடிக்க இருக்கிறார் அஜித்.
அஜித் சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டம் முதலே சக நடிகர்களிடம் அதிக மரியாதையுடன் நடந்துக்கொள்பவர் அஜித். அதனாலேயே சினிமாவில் அவருக்கு அதிக மரியாதை இருந்து வந்தது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் யாரிடம் கேட்டாலும் அவர்கள் அஜித் குறித்து நல்லவிதமாக கூறுவதை கேட்க முடியும்.
அஜித்தின் சில திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பாளராக இருந்துள்ளார். அந்த வகையில் அஜித்திற்கும் கலைப்புலி எஸ்.தாணுவிற்கும் இடையே நல்ல பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் கலைப்புலி எஸ்.தாணுவின் மனைவிக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனது.
காத்திருந்த அஜித்:
அந்த சமயத்தில் மனைவிக்கு வைத்தியம் பார்ப்பதற்காக வெளிநாடு சென்றுவிட்டார் தாணு. அதன் பிறகு சில நாட்கள் கழித்து அவர் வீடு திரும்பினார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அஜித் அவரது மனைவி ஷாலினியையும் அழைத்துக்கொண்டு கலைப்புலி எஸ். தாணு வீட்டிற்கு சென்றார்.
ஆனால் அந்த சமயம் தாணு வீட்டிற்கே வந்து சேரவில்லை. இதனால் அவரது வீட்டு வாசலிலேயே காத்திருந்தார் அஜித். அதன் பிறகு 4 மணி நேரம் கழித்து தாணு அவர் மனைவியுடன் வந்துள்ளார். அப்போதுதான் அஜித் அங்கு 4 மணி நேரமாக காத்திருக்கும் விஷயம் தாணுவிற்கு தெரிந்துள்ளது. பிறகு அவர்களை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு தனது மனைவியுடன் திரும்ப சென்றுள்ளார் அஜித். ஒரு பேட்டியில் இந்த நினைவுகளை பகிர்ந்துள்ளார் கலைப்புலி எஸ்.தாணு.
Idli kadai:…
Rajinikanth: தமிழ்…
Soori: கோலிவுட்டில்…
Vijay: நடிகர்…
Vijay Devarakonda:…