Arasan: அரசன் வசூல் சினிமா உலகை உலுக்கும்!.. ஹைப் ஏத்தும் கலைப்புலி தாணு!...
தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை படத்தின் தொடர்ச்சியாக தற்போது அரசன் படம் உருவாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கிவரும் இந்த படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்./ இந்த படத்தை கலைப்புலி தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் துவங்கப்பட்ட போது பல பிரச்சனைகளையும் சந்தித்தது. சிம்பு மூலமாகவும் சில பிரச்சனைகள் வந்தது. அதையெல்லாம் சமாளித்து தற்போது படப்பிடிப்பை வெற்றிமாறன் நடத்தி வருகிறார். இன்னும் இரண்டு மாதங்களில் இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து விடும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று விகடன் விருது விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ‘நேற்று இயக்குனர் வெற்றிமாறனிடம் பேசினேன்.. படம் தொடர்பான அப்டேட்டுகளை அவர்தான் சொல்ல வேண்டும்.. ஆனால் அரசன் வசூலில் ஈடு இணையே இல்லாத வகையில் சினிமா உலகை ஒரு உலுக்கு உலுக்கும்.. ஒவ்வொரு பிரேமிலும் அதற்கான வேலைப்பாடு தெரிகிறது. ஈடு இணையில்லாத ஒரு வெற்றியை அரசன் படம் பெறும்’ என சொல்லி ஹைப் ஏற்றியுள்ளார்.கலைப்புலி தாணுவின் இந்த அப்டேட் சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.
