Kalamkaval Teaser: மம்முட்டி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் களம் காவல். இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை ஜித்தின் கே ஜோஸ் என்பவர் இயக்கியிருக்கிறார். இதுதான் இவருக்கு முதல் திரைப்படம். ஒரு விறுவிறுப்பான க்ரைம் ஆக்சன் திரில்லர் திரைப்படத்தைப் போன்று இந்த டீசர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மம்மூட்டி மற்றும் விநாயகன் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். மம்முட்டியும் விநாயகனும் ஒருவருக்கொருவர் மோதுவது மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக தெரிகிறது. நம் தமிழ் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களின் டீசர் வெளியீட்டில் பார்க்கும் பொழுது ஒரு பெரிய ஆடம்பரமே செய்து விடுவார்கள். அதற்கேற்ற வகையில் மாஸ், ஸ்டைல், ஆக்சன் என எல்லாமே அந்த டீசரில் இருக்கும்.
குறிப்பாக ஒரு ட்ரைலரை போல பிரம்மாண்டமாக்கி விடுவார்கள். ஆனால் மம்முட்டியின் இந்த களம் காவல் டீசரை பார்க்கும்பொழுது மம்மூட்டி தனக்கே உரிய ஒரு புன்னகை சிரிப்புடன் ஒரே ஒரு பார்வையால் வாயில் சிகரெட்டையும் வைத்து பார்ப்பதைப் போல இந்த டீசர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதுவே இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டீசர் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அனைவரும் மம்முட்டி இஸ் பேக் என்றும் டெரிஃபிள் லுக் என்றும் எதிர்பார்க்காத ஒரு கதைக்களமாக இந்த படம் இருக்கும் என்றும் பாராட்டி வருகிறார்கள். மலையாளத்தில் ஒரு பெரிய லெஜெண்டாக பார்க்கப்படுபவர் மம்மூட்டி. அவரைச் செல்லமாக மம்முகா என்று தான் அனைவரும் அழைப்பார்கள்.
அவருடைய பெரும்பாலான படங்கள் க்ரைம் திரில்லர் இவைகளை மையப்படுத்தி தான் வெளிவந்திருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் அப்படி ஒரு கதைக்களத்தை அடிப்படையாக வைத்து தான் இருக்கும் என அனைவரும் கூறி வருகிறார்கள்.
RohiniSub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.