Categories: Cinema News latest news

நாளைக்கு ரிலீஸ்.. ரீல காணோம் கதையா இருக்கு ‘கல்கி’ படத்தோட நிலைமை! என்ன மேட்டர் தெரியுமா?

Kalki :பிரபாஸ் நடிப்பில் நாளை ரிலீஸ் ஆகும் திரைப்படம் கல்கி. பிரபாஸுடன் இணைந்து அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா அதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். மிகப்பிரமாண்ட அளவில் மிகப் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் நாளைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

பேன் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இந்த கல்கி திரைப்படத்தின் டிரைலர் ஒரு ஹாலிவுட் தரத்தில் அமைந்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு இந்த திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் ஒரு நல்ல ரீச்சை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: தசாவதாரத்தையும் தூக்கிச் சாப்பிட்டு விடுமா இந்தியன் 2? ரஜினிக்கு உள்குத்தா?

அது மட்டுமல்லாமல் இது ஒரு புது இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழு தரப்பிலிருந்து கண்டிப்பாக இந்த படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டையை நடத்தும் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் இந்த கல்கி திரைப்படத்தை 3டி படமாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.  நாளை ரிலீஸாகுவதால் 3டி தரத்தில் இந்த படத்தை உருவாக்க டெக்னிக்கல் பிழையில் படம் மாட்டிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் முதலில் 2d தரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்களாம். படம் ரிலீஸ் ஆகி இரு தினங்களுக்கு  பிறகுதான் 3டியில் படம்  ஒளிபரப்பாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் 3d -காக தனியாக காசு வசூலித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: விஜயகாந்திடம் சொல்லப்பட்ட விஜய் பட கதை… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

அந்த பணத்தை திருப்பிக் கொடுப்பார்களா அல்லது அதற்கு பதிலாக பாப்கானை கையில் கொடுக்கப் போகிறார்களா என்று  நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இவ்வளவு கோடி பணத்தை போட்டு படம் எடுத்தவர்கள் இந்த விஷயத்தில் கோட்டை விட்டார்களா என்று பலதரப்பிலிருந்து கேள்வி கேட்டு வருகின்றனர்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini