
Cinema News
Lokah Movie:மீண்டும் கெத்து காட்டும் மல்லுவுட்! கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் ‘லோகா’ படம் எப்படி இருக்கு?
Lokah Movie: அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி இறுதியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளன. படத்தின் டீசர் ட்ரெய்லர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி மிகுந்த எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தி இருந்தது. லோகா படத்தின் முதல் பாதியில் கல்யாணி பிரியதர்ஷினின் நடிப்பு அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
படத்திற்கு ஜேக்ஸ் பெஜோயின் இசை அமைத்திருக்கிறார். தனது கவர்ச்சிகரமான மற்றும் வசீகரிக்கும் பின்னணி இசையால் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளார் ஜேக்ஸ் பெஜோய். படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்த படத்தை டொமினிக் அருண் என்பவர் இயக்கியுள்ளார். துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கல்யாணி பிரியதர்சனுடன் இணைந்து நஸ்லென் மற்றும் அருண் சூரியன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கின்றனர். அதுபோக டான்ஸ் மாஸ்டர் சாண்டியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் படம் வெளியானதிலிருந்து நல்ல ஒரு பாசிட்டிவ் விமர்சனத்தையே பெற்று வருகிறது. மலையாள சினிமாவின் கேம் சேஞ்சர் லோகா திரைப்படம் என படம் பார்த்த அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
மேலும் இசையமைப்பாளர் ஜேக்ஸ் படத்தை தன்னுடைய இசை மூலம் வேறு எங்கேயோ கொண்டு சென்றுவிட்டார் என்றும் அவரை பாராட்டி வருகிறார்கள். இது ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக வெளியாகி இருக்கிறது. படத்தின் மேக்கிங் சிறப்பாக அமைந்திருப்பதாகவும் ஒரு கற்பனையான லட்சிய பிரபஞ்சத்தை படத்தின் இயக்குனர் உயிர்பிக்கிறார் என்றும் இது ஒரு பொழுதுபோக்கு மற்றும் வீரத்தை அழகாக காட்டுகிறது என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படத்தை பாராட்டியே பேசி வருகின்றனர்.
மேலும் படத்தை தயாரித்த துல்கர் சல்மானுக்கு ஒரு பெரிய நன்றி என்றும் நல்ல ஒரு தரமான படத்தை அவர் கொடுத்திருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள். இது ஒரு வுமன்ஸ் சென்டிரிக் திரைப்படமாகவே பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல கல்யாணி பிரியதர்ஷனுக்கு இந்த படம் மேலும் நல்ல ஒரு அங்கீகாரத்தை கொடுத்திருப்பதாகவும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். தொடர்ந்து மலையாள சினிமா பொழுதுபோக்கு துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்று வரும் நிலையில் இந்த லோகா திரைப்படம் மூலம் ஒரு தவிர்க்க முடியாத இடத்தை சினிமா உலகில் தக்க வைத்துக் கொள்ளும் என நன்றாகவே தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு ரேட்டிங் நான்கு என கொடுக்கப்பட்டிருக்கிறது.