கமல் பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத ஒரு விஷயம்! புட்டு புட்டு வைக்கும் ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவிற்கே அடையாளம்: தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக இருப்பவர் நடிகர் கமல். 70களில் ஒரு காதல் இளவரசனாக கமலை இளம் பெண்கள் மனதில் வைத்து நேசித்து வந்தனர். இவர் நடித்த படங்கள் அந்தளவுக்கு காதல் வயப்பட வைக்கும். அந்த நேரத்தில் அனைவரையும் ஈர்க்கும் திறமை மற்றும் தோற்றம் கொண்டவராக கமல் இருந்து வந்தார் என்பதுதான் உண்மை. ரஜினி, விஜய் மாதிரி கமலின் படங்கள் வசூலை குவிக்கும் என்று சொல்லிவிட முடியாது.
புது புது முயற்சிகள்: ஆனால் ஏதாவது ஒரு வகையில் இளம் தலைமுறையினருக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் படங்களாகத்தான் கமலின் படங்கள் இருக்கும் என்று சொல்ல முடியும். புது புது முயற்சிகள், சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு போகலாம் என்பதை மட்டுமே கமல் யோசித்து வருகிறார். இப்போது கூட ஏஐ தொழில் நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார் கமல்.
யாருக்கும் தெரியாத சாதனை: இந்த நிலையில் 2கே கிட்ஸ்களுக்கு தெரியாத கமல் செய்த சாதனைகள் என்னென்ன என்பதை பற்றி பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் தெளிவாக கூறியிருக்கிறார். அவர் கூறிய அனைத்து விஷயங்களும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. கமல் எத்தனை விருதுகள் பெற்றிருக்கிறார்? என்ன மாதிரியான கௌரவம் அவருக்கு கொடுக்கப்பட்டது என்பதை கூறியிருக்கிறார் ரோபோ சங்கர்.
முதல் நடிகர்: வாழ்வே மாயம் 108 நாள், சகலகலா வல்லவன் 110 நாள், மூன்றாம் பிறை 200 நாள், ஒரு ஹிந்தி படம் 329 நாள். 1982 ஆம் ஆண்டில் ஒரு நடிகருக்கு 4 படங்கள் ஒரே வருஷத்தில் ரிலீஸாகி 4 படமும் வெள்ளி விழா கண்டது கமலின் இந்த 4 படங்கள்தான். 4 தேசிய விருது வாங்கிய ஒரே தென்னிந்திய நாயகனும் கமல்தான். மூன்று நந்தி விருது வாங்கியதும் அவர்தான். 19 ஃபிலிம் ஃபேர் விருது வாங்கியதும் கமல்தான்.
3 சர்வதேச விருது வாங்கியதும் கமல்தான். உலகத்திலேயே 200 விருதுக்கு மேல் வாங்கிய ஒரே நடிகரும் கமல்தான். ஆஸ்கார் கதவுகளை ஏழுமுறை தட்டிய ஒரே தென்னிந்திய நடிகரும் அவர்தான். சினிமாவில் 100 படங்களை எடுத்து பார்த்தால் அதில் பெஸ்ட் திரைப்படம் என்றால் நாயகன் திரைப்படம் இருக்கும். 12 திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே திரைப்படமும் நாயகன் படம் தான்.
1980 ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அதே போல் சத்யபாமாவில் டாக்டர் பட்டமும் கொடுக்கப்பட்டது. இப்படி கமலின் சாதனையை ரோபோ சங்கர் கோர்வையாக சொல்லி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். ரோபோ சங்கர் அடிப்படையில் கமலின் தீவிர ரசிகரும் கூட. அவரது மகள் இந்திரஜா திருமணத்திற்கு கூட கமல் வந்திருந்து அவரது மகளை வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.