சினிமாவில் போட்டி என்பதை தாண்டி நடிகர் ரஜினியும், கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதேநேரம், பல முக்கியமான தருணங்களில் கமலின் அறிவுரையை ரஜினி ஏற்று நடந்துகொண்டார் என்பது பலருக்கும் தெரியாது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியாகி மெகா ஹிட் அடித்த திரைப்படம் படையப்பா. இப்படம் தயாரானதும் படத்தை பார்த்த ரஜினி படம் மூன்றரை நேரம் ஓடுகிறது. எந்த காட்சியையும் வெட்ட வேண்டாம். எல்லா காட்சியுமே நன்றாக இருக்கிறது. எனவே, இரண்டு இடைவேளைகள் விடலாம். ஹிந்தியில் ஏற்கனவே ஒரு படத்திற்கு அப்படி செய்துள்ளனர் என கே.எஸ்.ரவிக்குமாரிடம் கூறியுள்ளனர்.
ரஜினி கூறியதால் என்ன செய்யலாம் என்கிற யோசனையில் கே.எஸ்.ரவிக்குமார் இருந்துள்ளார். அதன்பின், கமலிடம் ரஜினி இதுபற்றி ஆலோசனை செய்துள்ளார். அதற்கு ‘நீங்கள் நடித்துள்ளதால் எல்லா காட்சியுமே நன்றாக இருப்பதாகத்தான் உங்களுக்கு தெரியும்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரண்டு இடைவேளை என்பதெல்லாம் செட் ஆகாது. படத்தின் நீளத்தை குறைக்கும் வேலையை இயக்குனரிடம் விட்டு விடுங்கள். அவருக்கு தெரியும்’ என கமல் கூற ரஜினியும் அதை ஏற்றுக்கொண்டார். அதன்பின் சில காட்சிகளை குறைத்து அப்படம் வெளியாகி ஹிட் அடித்தது.
இதை கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…