1. Home
  2. Latest News

இதோ பர்த்டே ட்ரீட் வந்துருச்சுல.. கமல் அன்பறிவு படத்தின் புது அப்டேட்

kamal
ரஜினி படத்தை அடுத்து மற்றுமொரு அப்டேட்டை வெளியிட்ட கமல்
 

கடந்த ஜூன் ஐந்தாம் தேதி கமல்ஹாசன் மணிரத்தினம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் வெளியாகி அட்டர் ஃபிளாப் ஆனது. அதன் பிறகு கமல்ஹாசன் அன்பறிவு மாஸ்டர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது .இந்தப் படம் ஜூலை அல்லது ஆகஸ்டில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையில் தக் லைப் திரைப்படத்தின் தோல்வி, அதனை அடுத்து கமல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றது போன்ற காரணங்களால் அன்பறிவு படம் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்த படத்தின் திரைக்கதை எழுத்தாளராக பிரபல மலையாள ரைட்டர் ஷியாம் புஷ்கரன் இணைந்திருப்பதாக தகவல் வெளியானது. இவருடைய திரைக்கதையில் கும்பளாங்கி நைட்ஸ் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இருந்தாலும் இந்த படம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தன. இதற்கிடையில் இன்று கமல் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

 அவருடைய பிறந்தநாள் பரிசாக இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த படத்தில் பணியாற்றப் போகும் டெக்னீசியன்கள் பற்றிய அப்டேட் தான் இன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர்கள் அன்பறிவு மாஸ்டர் என அனைவருக்கும் தெரியும். படத்திற்கு இசையமைப்பாளராக ஜேக்ஸ் பேஜாய் பணியாற்ற இருக்கிறார். ஒளிப்பதிவாளராக சுனில் கே எஸ் பணியாற்ற இருக்கிறார்.

எடிட்டராக சமிர், ப்ரொடக்ஷன் டிசைனராக விக்னேஷ் பங்லான், பப்ளிசிட்டி டிசைனராக துனிஜான் ஆகியோர்கள் இந்த படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். இது பற்றிய அப்டேட் தான் இன்று வெளியாகி இருக்கிறது. இன்னும் படத்தின் நடிகர் நடிகைகள் யார் யார் என்பது வரும் வாரங்களில் தெரியவரும். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.

kamal

ஏற்கனவே நேற்று யாரும் எதிர்பாராத ஒரு புதிய அப்டேட்டை கொடுத்து ஆச்சரியத்தில் திகைக்க வைத்தார் கமல். சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தையும் அவர்தான் தயாரிக்க இருக்கிறார். ஒரு பக்கம் அரசியல் சார்ந்த வேலைகளிலும் இன்னொரு பக்கம் தயாரிப்பு வேலையிலும் பிஸியாக இறங்கிவிட்டார் கமல்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.