Shankar Kamal
உலகநாயகன் கமல் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. 10 நாள் வரை படத்தின் வசூல் 150 கோடி தான் என்கிறார்கள். ஜெயிலர் படத்தின் முதல் 2 நாள் வசூலைத் தான் கமல் படம் இதுவரை கொடுத்துள்ளதாம். அந்த வகையில் படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் புதுத்தகவல் ஒன்றை சொல்கிறார். என்னன்னு பார்ப்போமா…
கமலே ஒரு தடவை இந்தியன் 2 படத்தைப் பார்த்தாரா அல்லது இந்தியன் 3 பார்த்தாரான்னு தெரியல. அப்புறம் அவர் பதிவு போடுறாரு. ‘உங்கள் வாழ்க்கையிலேயே இதுதான் உச்சம்னு நினைச்சிராதீங்க. இதை விட தாண்டி உங்கள் வேகம் போகணும்’னு பாராட்டுகிறார்.
அப்படிப் பார்க்கும்போது ஷங்கர் இதுவரை எடுத்த படங்களிலேயே இதுதான் சிறந்த படம்னு சொல்றாரான்னு பார்க்க வேண்டியிருக்கு. அந்த வகையில இன்னும் பல சாதனைகள் பண்ணனும்னு சொல்றாரு.
Indian 2
அப்படின்னா கமலே இந்தப் படத்தை வியக்கிறாரு. அவரே பாராட்டிய படம்னு தான் நாம பார்க்க வேண்டியிருக்கு. ஆனால் அதே கமல் டப்பிங் முடிச்சிட்டு வந்து என்ன சொல்றாருன்னா, ‘இந்தப் படம் வந்து ரொம்ப லேக்கா இருக்கு. இந்தியன் 2ஐயும், இந்தியன் 3ஐயும் ஒண்ணா ஆக்கி ஒரே படமா ஆக்கிடுங்க.
அது தான் விறுவிறுப்பா இருக்கும். நீங்க இது தனியா, அது தனியான்னு போடும்போது இந்த லேக் வந்து தவிர்க்க முடியாத ஒண்ணா ஆகிவிடுகிறது. அதனால பார்த்துக்கங்க’ன்னு ஷங்கர்கிட்ட சொல்லி இருக்காரு. ஆனா அப்பவும் ஷங்கர் பிடிவாதமா இந்தியன் 2, இந்தியன் 3ன்னு பிரிக்கிறாரு.
அது என்னன்னா சுயலாபத்துக்காக. இந்தியன் 2வுக்கும் சம்பளம் வாங்கியாச்சு. இந்தியன் 3க்கும் சம்பளம் வாங்கிடலாம். அப்ப ரெண்டு படமா இருந்தால் தான் தனித்தனியா சம்பளம் கிடைக்கும். இப்படி ஒரு கணக்குப் போடுறாரு. மொத்தக் கணக்குமே இப்ப வீணாப்போச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…