Categories: Cinema News latest news

ரஜினியை தொடர்ந்து கமலுடன் ஜோடி சேர போகும் பிரபல பாலிவுட் நடிகை…! சம்பளம் கட்டுமா…?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் வெற்றி கமலை திரை வாழ்க்கையில் மறுபிரவேசத்திற்கு வித்திட்டது என கூறலாம். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் – 2 படத்தில் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் தன் அடுத்த புதிய ப்ராஜக்டில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்தியன் – 2 படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில் மீதமுள்ள படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் நடித்து வந்த நிலையில் படம் சிலபல காரணங்களால் பாதியில் நின்று போக காஜல் அந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இப்போது அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், சமுத்திரக்கனி, சுகன்யா உட்பட பல நடிகர்களும் நடிக்க இருக்கின்றனர். இந்த நிலையில் காஜலை அடுத்து கமலுக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை படக்குழு அணுகியுள்ளனர். அவர் தான் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இவர் ஏற்கெனவே ரஜினிக்கு ஜோடியாக கோச்சடையான் என்ற கிராபிக் படத்தில் நடித்திருந்தார். படத்திற்கு 22 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அதையும் லைகா நிறுவனம் தர சம்மதம் தெரிவித்து விட அம்மணி தான் பதில் சொல்லவேண்டும். தீபிகா தற்போது பிரபாஸுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini