Categories: Cinema News latest news throwback stories

கமலுக்காக தான் நான் செஞ்சேன்! ஆனால் அந்தாளே என்னை கைவிட்டுட்டார்.! விளாசும் சினிமா பிரபலம்.!

தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு பழக்கம் உண்டு. அது கொஞ்சம் கெட்ட பழக்கம் தான். அதாவது, அந்த காலத்தில் தயாரிப்பாளர் கதை கேட்பார். அந்த கதைக்கேற்ற ஹீரோவை தயாரிப்பாளர் முடிவு செய்து அந்த ஹீரோ கால்ஷீட்டை எப்படியும் வாங்கிவிடுவார். பிறகு அந்த கதை படமாக்கப்படும். அப்படி நிறைய நல்ல கதைகள் வெளியாகியுள்ளது.

 

ஆனால், தற்போது இயக்குனர், ஹீரோவிடம் கதை கூறிவிடுகிறார். ஹீரோ அதனை ஓகே செய்துவிட்டு, பிறகு தயாரிப்பாளரை சந்தித்து இயக்குனர் கதை கூறுவார். ஹீரோ ஓகே சொன்ன கதை என்பதால், தயாரிப்பாளர் மாற்றம் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், அதே நேரத்தில் அந்த பட சமபந்தப்பட்ட பிரச்சனை என்றால் அது தயாரிப்பாளர் தலையில் தான் விடியும். ஆம். அந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கிறது. வசனம் இருக்கிறது என அப்படத்தை தடை செய்யவேணும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அது தயாரிப்பாளருக்கே பிரச்சனை.

இது குறித்து பிரபல தயாரிப்பாளரும் , விநியோகிஸ்தருமான கே.ராஜன் கூறுகையில், ‘ நடிகர் தான் தற்போது கதை  கேட்டு படத்தில் நடிக்கிறார். சம்பளம் வாங்கிக்கொண்டு நகர்ந்து விடுகிறார். அதன் பிறகான பிரச்சனைகள்  தயாரிப்பாளர் வசம் சென்று விடுகிறது. ‘

இதையும் படியுங்களேன் – என்ன இருந்தாலும் உங்க அழகுக்கு ஈடாகாது.! சுகன்யாவின் மகளை பார்த்து வியந்துபோன நெட்டிசன்கள்.!

சூர்யாவின் ஜெய் பீம் படத்திற்கு பிரச்சனை வந்த போது, அவர் மன்னிப்பு கேட்கவில்லை. அவருடைய அடுத்த படத்திற்கு சிலர் பிரச்சனை வரும்போது அவர் ஒன்றும் சொல்லவில்லை. சொல்ல போவதுமில்லை. ஏனென்றால் அது சன் பிக்ச்சர்ஸ் படம் அவர் நடித்து சம்பளம் வாங்கிவிட்டு சென்றுவிட்டார். அவ்வளவுதான்.

அதே போல திருட்டு விசிடி ஒரு நேரத்தில் பெருகி இருந்தபோது, பர்மா பஜாரில் சென்று கடைகளில் கலவரம் செய்தேன். ஆனால் அப்போது எனக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே நபர் ரஜினி மட்டும்தான். கமல் படம் திருட்டு விசிடியை தடுக்க தான் நாங்க சென்றோம். ஆனால் அந்தாளு எங்களை கண்டுக்கவே இல்லை’ என தனது ஆதங்களத்தை ஒரு டிவி சேனலில் தெரிவித்தார்.

Manikandan
Published by
Manikandan