×

அந்த நடிகரால் எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம்... சோகத்தில் கமல்!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ தற்போது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையிலும் அரசியல் பணிகளை துரிதமாக கவனித்து வருகிறார். 

 

2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் இவர் பல மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் சென்று வருகிறார். திருச்சியில் கட்சியினர் மத்தியில் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து பேசியுள்ளார். 

ரஜினி ரசிகர்களின் மனோ நிலை தான் எனக்கும், சற்றே ஏமாற்றம், அவரது ஆரோக்கியம் எனக்கே மிக முக்கியமான விஷயம், என் ரஜினி நலமாக இருக்க வேண்டும், எங்கிருந்தாலும் நலமாக வாழவேண்டும் என அவர் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காந்த் அண்மையில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இந்த படக்குழுவில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

ரஜினியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டு கொரோனா தொற்று தனக்கு இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார். இருந்த போதிலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிசிச்சை பெற்று மீண்டும் சோதனையில் கொரோனா இல்லை என தெரிந்ததும் ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார்.

அதே வேளையில் அவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்தது தற்போது மிகப்பெரிய விவாதமாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News