சேயோனில் கேமியோ வேடத்தில் கமல்!.. செம டிவிஸ்ட்டா இருக்கே!..
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தாய்க் கிழவி படத்தை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் சேயோன்.
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாகவே மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில்தான், இந்த படத்தில் ஒரு கேமியா வேடத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
அதிலும் விருமாண்டிக் கெட்டப்பில் இந்த படத்தில் கமல் நடிக்கவிருக்கிறாராம். அடுத்து கமல் சண்டியர் என்கிற படத்தில் நடிக்கவுள்ள நிலையில் சேயோனை தனது அந்த படத்திற்கான புரமோஷனாக கமல் பயன்படுத்திக்கொண்டதாக பார்க்கப்படுகிறது. சேயோன் திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு கேமியோ வேடத்தில் நடிக்கவிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
