பெற்றோரிடம் இருந்து அப்படி கற்ற கமல்... பிள்ளைகளிடம் எப்படி காட்டினார்னு பாருங்க!
தமிழ்த்திரை உலகின் லெஜண்ட், மக்கள் நீதி மய்ய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவிகளின் சரமாரி கேள்விகளுக்கு அனல் தெறிக்க பதில் சொல்லி இருக்கிறார். என்னன்னு பாருங்க.
நீங்கள் உங்களது பெற்றோர்களிடம் இருந்து கற்றுக் கொண்டது என்ன? பிள்ளைகளிடம் இருந்தும் கற்றுக் கொள்வது என்னன்னு மாணவி ஒருவர் கேட்க, அதற்கு கமல் சொன்ன பதில் இது.
கெட்டதும் கத்துக்கிட்டேன். நல்லதும் கத்துக்கிட்டேன். ஆனா நல்லது கொஞ்சம் லேட்டா கத்துக்கிட்டேன். அவங்களுக்கு இருந்த கோபம் எல்லாம் அடேங்கப்பா பார்த்தாலே தொடை நடுங்குதே. இந்தக் கோபம் எனக்கும் வரணுமே அப்படின்னு கத்துக்கிட்டேன். என் குழந்தைகள்கிட்ட அதை நான் காட்டல. வரணும்னு ஆசைப்பட்டேனே தவிர அந்தக் கோபத்தை நான் காட்டல. அதுவும் அங்கே தான் கத்துக்கிட்டேன். ஏன்னா பேரண்ட்ஸ் வந்து டபுள் ரோல் போடுவாங்க.
ஒருத்தர் திட்டுனா ஒருத்தர் அணைச்சிடுவாங்க. இவங்க அணைக்கிறவங்க திட்டுனா திட்டுனவரு அணைச்சிடுவாரு. இப்படி ஒரு ஏற்பாடு அவங்களுக்குள்ள இருந்தது. அதை விட சிறப்பான ஒரு ஏற்பாடை பண்ணனும்கறதை நான் அவங்ககிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன். இன்னும் பல விஷயங்கள் நான் தைரியமா பேசுறேன்னா அதுக்கான ஊக்கத்தை அவங்க கொடுத்துருக்காம வந்துருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களா? பயமுறுத்தியே நீ மனசுல தோன்றதை எல்லாம் வெளியே பேசாத. நிஜம் பேச வேண்டிய அவசியமே கிடையாது.
இந்த உலகத்துலன்னு சொல்லிக் கொடுத்துருந்தா இந்த மேடையில் நான் நிக்கவே வாய்ப்பு இல்ல. நிறைய கத்துக்கிட்டேன். கத்துக்க வேண்டியது சிலது விட்டுட்டார். அதுக்கு ரிகரட்டும் இல்ல. ஏன்னா வக்கீலாக வேண்டிய அவசியம் இல்லை. நான் இனிமே கதர் போட வேண்டிய அவசியம் இல்லை. அப்பாவின் நினைவாக 'kamalhassan house of kathar'என்று ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. நான் போட்டுருக்குறது கதர். அது வரும். நல்ல குணங்கள் சில காரணங்களுக்காக அவங்க கொடுத்து அனுப்பினது. நம்ம அந்த லக்கேஜை இறக்கி வைக்கவே முடியாது என்று நச்சுன்னு பதில் சொன்னார் கமல்.
