Categories: Cinema News latest news

பணம் இருந்தால் பாட்ஷாதான்! சங்கருக்கு கமல் கொடுத்த வாட்ச்சின் விலை என்ன தெரியுமா?

இந்திய சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக காணப்படுகிறார் நடிகர் கமல்ஹாசன். கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் நடித்த பெருமைக்குரிய நடிகராக கமல் இருக்கிறார். சினிமாவில் என்சைக்ளோபீடியா என்றே கமலை கூறலாம். அந்த அளவுக்கு சினிமாவின் நுணுக்கங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறார். தசாவதாரம் விஸ்வரூபம் போன்ற படங்களை அடுத்து அரசியலில் ஆர்வம் காட்டி வந்த கமல் இனிமேல் சினிமாவில் அவ்வளவுதான் என்று ரசிகர்கள் நினைத்து இருந்தனர்.

ஆனால் ஒரு சரியான கம் பேக் கொடுத்து இன்னும் என் ஆட்டம் முடியவில்லை என்பதை விக்ரம் படத்தின் மூலம் நிரூபித்து காட்டினார். அதற்கு முழு காரணம் லோகேஷை கூறலாம். அந்தப் படம் நினைக்க முடியாத அளவிற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. வசூல் ரீதியிலும் அள்ளிக் குவித்தது.

kamal1

படத்தை தயாரித்தவர்கள் படத்தை விநியோகித்தவர்கள் படத்தின் உரிமையை வாங்கி ரிலீஸ் செய்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கணிசமான லாபமான தொகையை பெற்று தந்தது. இதனால் கமல் மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். அதன் காரணமாகவே இந்த படத்தை எடுத்த லோகேஷுக்கு ஒரு காரை அன்பளிப்பாக கொடுத்தார்.

மேலும் படத்தில் கேமியோ ரோலில் நடித்த சூர்யாவிற்கு ஒரு ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக கொடுத்தார். இதே வரிசையில் இரண்டு தினங்களுக்கு முன்பாக கமல் இயக்குனர் சங்கருக்கும் ஒரு வாட்ச்சை பரிசாக கொடுத்திருக்கிறார்.

kamal2

அதாவது இந்தியன் 2 படத்தின் சில முக்கியமான காட்சிகளை கமல் பார்த்தாராம். அந்த காட்சிகளை பார்த்து சங்கரை மனதார வாழ்த்தியிருக்கிறார். வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அவருக்கும் ஒரு கடிகாரத்தை தன்னுடைய அன்பளிப்பாக கொடுத்திருக்கிறாராம்.

ஆனால் இதில் பெரிய ஹைலைட்டே அந்த வாட்ச்சின் விலை தான். அந்த கடிகாரத்தின் விலை கிட்டத்தட்ட 15 லட்சம் மதிப்பை உடையதாம். கையில் சாதாரணமாக கட்டப்படும் கடிகாரத்திற்கு இவ்வளவு லட்சத்தை கொடுத்து கமல் வாங்கி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini